ஆண்-பெண்

அன்னை ஆதி பராசக்தி என்று
வழிபடுவோருக்கு, அந்த
'சக்திக்குள், சிவன் 'ஐக்கியம்
என்பது தெளிவு,
பரமசிவன் என்று வழிபடுவோர்க்கு
சிவனும் சக்தி ஐக்கியம் தெளிவு
திருமாலை துதிப்போர்க்கு
'மாலுள் வீற்றிருக்கும்.திரு'புலப்படும்
இப்படி ஆண் பெண் ரகசியம் காட்டத்தான்
உலகில் ஆண், பெண் என்று மனிதரை
சிருட்டித்தானோ , இந்த ஆணும்-பெண்ணும்
சேர்ந்தால்தான் மனித சிருட்டியின்
அர்த்தம் முழுமைபெறும் என்று
நினைத்த இறைவன் இந்த
'பால்கள்' இரண்டும் சேர்ந்திடவே
'பெண்'''என்ற காந்தம் கொண்டு
'ஆணை' கவர்ந்திட படைத்தானோ
தன் பால் இழுத்து கவர்ந்திட !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Feb-18, 8:23 am)
பார்வை : 120

மேலே