காதலர் தினம் - நூறாவது கவிதை
நீ பிறக்கவில்லை என்றால்
பூக்களையும் இறைவன் படைத்திருக்க மாட்டான்..
உன் பிறந்த நாளை முன்னிட்டு
சூரியனிலும் மர நடு விழா நடத்த ஆசை.
நீதான் என் எட்டாவது அதிசயம்,
ஏனெனில் நீ அதிசயங்களையும் அதிசய பட வைக்கிறாய்..
அழகான நூறு பெயரை பட்டியலிட சொன்னால்,
அதில் நூறு தடவையும் உன் பெயரைதான் எழுதுவேன்..
நீ அழகு என்று பொய் சொல்லவும் தோன்றுகிறது,
நீ மட்டும்தான் அழகு என்ற உண்மையையும் சொல்ல தோன்றுகிறது..
உனக்கு அழகிய பரிசு கொடுக்க நினைத்தேன்.
உன் புகைப்படம் தவிர அழகாகக் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை ..
இறைவன் அழகானவற்றை படைக்க நினைத்தால்,
மீண்டும் உன்னைதான் படைப்பான்..
அழகுகான இலக்கணம் உன்னிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
அது உன்னை விட்டு பிரியாமலும் தொடர்கிறது..
கண்ணாடியும் தன் முகத்தை பார்த்து கொண்டது,
நீ எதிரில் நிற்கும் போது..
நாகரீகத்தின் பிறப்பிடம் சிந்து சமவெளியாம்,அவர்களுக்கு தெரியாது
நீ நாகரீகத்தின் முன்னோடி என்று ...
ஏழு அதிசயங்களையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமா,
உன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொள்..
எனக்கென்று காதலர் தினமென்று எதுவுமில்லை,
உன் பிறந்த நாள் இருக்கையில் ....
காதலையும் உன்னையும் பிரித்து பார்க்கவில்லை ..
உன் பிரியங்கள் இன்னும் பிரியாமல் இருப்பதால் ....
happy valentine's day