தெரிந்தவர்
தெரிந்தவரெல்லாம்
நண்பர்கள் அல்லர்;
சிரித்துப் பேசுபவரையும்
சேர்த்துத் தான் சொல்கிறேன்.
துரோகிகள் ஒளிந்துகொள்ளத்
தோதான இடம் நட்பு.
வார்த்தைகளில் இல்லை
செயலில் இருக்கிறது நட்பு.
புலன்கள் விழிப்பாயிருக்கட்டும்
பலன்கள் அல்ல...
புனிதமும் மனிதமும்
புரிதலுமே நட்பு.