சின்னஞ் சிறு பூமகளே
சின்னஞ் சிறு பூமகளே
சோகம் விட்டு தூங்காயோ!
சின்னஞ் சிறு பூமகளே
சோகம் விட்டு தூங்காயோ!
நமக்கென வீடு இல்லை
பசி போக்கும் உணவு இல்லை!
நமக்கென வீடு இல்லை
பசி போக்கும் உணவு இல்லை!
சின்னஞ் சிறு பூமகளே
சோகம் விட்டு தூங்காயோ!
சின்னஞ் சிறு பூமகளே..
உதவிக்கு யாரும் இல்லை!
எவருக்கும் ஈரம் இல்லை!
படைத்தவன் எங்கும் இல்லை!
பசியாலே தினமும் தொல்லை!
உதவிக்கு யாரும் இல்லை!
எவருக்கும் ஈரம் இல்லை!
படைத்தவன் எங்கும் இல்லை!
பசியாலே தினமும் தொல்லை!
காற்றை மட்டும் உண்டிருப்போம்
நேற்றை மெல்ல மறந்திருப்போம்!
சோகத்தை கொடுத்துவிட்டான்
சோற்றையேனோ மறந்துவிட்டான்!
அள்ளி அள்ளி தரவா சொன்னோம்
கிள்ளிக்கூட கொடுக்க வில்லை !
சின்னஞ் சிறு பூமகளே
சோகம் விட்டு தூங்காயோ!
சின்னஞ் சிறு பூமகளே..
தேவதை நீ வாழ்வதற்கு
தேவை இங்கே அன்புமட்டும்
பாதை தந்த ஆண்டவனே
கல்லும்முள்ளும் போட்டுவிட்டான்
தேவதை நீ வாழ்வதற்கு
தேவை இங்கே அன்புமட்டும்
பாதை தந்த ஆண்டவனே
கல்லும்முள்ளும் போட்டுவிட்டான்
நீ பிறக்க தவமிருந்தேன்
உன் சிரிப்பால் வாழ்ந்திருப்பேன்!
சொர்க்கம் வாழ்க்கை ஆகும் வரை
உயிர் கொடுத்து உழைத் திருப்பேன்!
இந்த நாள் கடந்துவிட்டால்
நாளை வரும் வெளிச்சம் என்பேன்!
சின்னஞ் சிறு பூமகளே
சோகம் விட்டு தூங்காயோ!
நமக்கென வீடு இல்லை
பசி போக்கும் உணவு இல்லை!
சின்னஞ் சிறு பூமகளே
ஆரி ராரோ ஆராரோ!
சின்னஞ் சிறு பூமகளே..