தர்மம்

இருப்பதை கொடுப்பதில் தவறேதும் இல்லை
பொறுப்பது எனஉணர தொடராது தொல்லை
வெறுப்பது வேண்டாமே தர்மத்தைக் காப்போமே
மறுப்பது இக்கருத்தை அழகென்றால் இல்லை

என்றோ உதவியது சிறிதுதான் எனினும்
பின்பொருநாள் அதுமாறும் நமக்கான அரணாய்
வருத்துகின்ற துன்பம்வந்து பயமுறுத்தும் போது
பெருந்துயரை நீக்குவதில் நம்தர்மம் முன்நிற்கும்

சரித்திரத்தில் பேரெடுத்த பேரரசர் பலரும்
தர்மத்திலும் தானத்திலும் தேர்ந்தவரே ஆவார்
இக்காலச் செல்வந்தர் பில்கேட்ஸும் கூட
மக்களுக்கு தன்பாதிச் சொத்தெழுதிக் கொடுத்தார்

தர்மத்தை தொடங்கிடுவோம் இனியெல்லாம் சுகமே
தர்மமே தலைகாக்கும் துன்பமதைப் போக்கும்
தர்மத்தை செய்திடவே சிக்கலெல்லாம் விலகும்
தர்மத்தை தொட்டபின்னே புதுவிடியல் கிட்டும்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 9:14 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 1518

மேலே