தேடு ,அரசால ஆட்தேடு
மூத்தமொழி தமிழென்றால் ,
மூத்தகுடியும் தமிழ் தானே ,
மொழியும் குடியும் நாமென்றால் ,
முதல் கோணும் நாம் தானே !
மொழி, அறம், கவி , காவியம்,
கலை , பண்பாடு , உழவு ,
அறிவியல் ...உலகுக்கு கொடுத்து ,
நம்மை ஆள்வதற்கு ஆள் தேடுகிறோம் ,.
தந்தை ஆண்ட குடும்பத்தில்
தவறுண்டேல் ,தாயாள்வாள்,
இரண்டுமன்றேல் ,
மூத்த சேய் ஆள்வான்.
காவலுக்கு நீ வைத்த
நாய் வந்தா ஆளும் நம்வீட்டை,
நாடாள்வதற்கு அறமும் மொழியும் ,
நாடகத்திற்கு நடிப்பும் அலங்காரமும் .
ஆனால்,
அறத்தையும் மொழியையும் நடிக்கவிட்டு ,
நடிப்பையும் அலங்காரத்தையும் ஆளவைத்தாய் .
பார்த்த கூத்தெல்லாம் போதாதென்று ,
கட்டிய வேடங்கள் கானதென்று,
திரைக்குள்ளிருந்து உன் பொழுதை
போக்கியது போதாதென்று ,
நாடாள நடிப்போன்றே போதுமென்று
மாயையுக்கு மண்டி போட்டாய்.
முகம் முதிர்ந்து ,பொலிவிழந்து ,
திரையே திகட்டி வேண்டாமென்று
விலை போகா நேரம் வந்தே ,
இனி அரசாள புதுமுகமென வரிசைகட்டி
உன் வாய்ப்பிற்கு வாய்பிளந்து காத்துநிற்க ,.
என்ன செய்வாய் , இனி என்ன செய்வாய் ,.
உன்வீட்டு பிரச்சனையும்,
உனக்கான ரசனையும் ,
உன்னோட தேவையையும்
உனை அன்றி யாரறிவார் ???
அறத்தினில் வள்ளுவன் காட்டிய வழியுண்டு ,
புரட்சியில் பாரதி மூட்டிய தீயுண்டு ,
ஆட்சியில் கர்மவீரர் செய்த செயல்கள் உண்டு ,
போதாதென்றால்,
அறிவியலை வாழ்வாய் கொண்டு
தற்கால அரசியலின் தரமென்றால்
தாமென்றே காட்டிச்சென்ற
அய்யா கலாமின் வார்த்தைகளுண்டு ,.
உண்டு உண்டு இன்னும் பல பல ,..
என்ன செய்வாய், இனி என்ன செய்வாய்.,,,,
இனியொரு விதிசெய்வாயா,
இனியெல்லாம் விதியென்றே இருப்பாயா,
என்ன செய்வாய், இனி என்ன செய்வாய்.,,,,