வெளியில் இல்லை

..............................................................................

உன் கால் நகங்களும்
என் கணிணி எழுத்துச் சதுரமும்
ஒத்த அளவுதான்..

அது அடிக்கிறது தரையில்..
இது அடிக்கிறது திரையில்...

மாயப் பிசாசு
மந்திர நீரீல் தள்ளியதைப் போல
உந்துகிறது நினைவு உன் பக்கமே....

தடைகள் இல்லைதான்..

போன வருடம் இதே தேதியில், இதே போல், இன்னொருத்தி....
ஆறு மாதங்களுக்கு அவளே
அம்சமாய்த் தெரிந்தாள்..
ஏழாம் மாதம் ‘‘ பெண்’’ ணாய்த் தெரிந்தாள்..
எட்டாம் மாதம் கோபக்காரி என்பதும்
கொஞ்சம் தெத்துப்பல் என்பதும் தெரிந்தது..

தேவதையாய்த் தெரிந்தது எப்படி என்று
தெரியாமல் திகைத்தது போன வாரம்..!

தடயமில்லாமல் அவள் நினைவகன்றது
இந்த வாரம்..

மனது காதலிக்கிறதா?
வயது காதலிக்கிறதா?

பயமாய் இருக்கிறது..
இதே கதி உனக்கும் ஏற்பட்டால்?

மௌனமாகத் திரும்புகிறேன்...

தடையும் புதிரும் வெளியில் இல்லைதான்..!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (20-Feb-18, 12:47 pm)
Tanglish : veliyil illai
பார்வை : 197

மேலே