காதலின் தீபம் 18
என் காதல்
ஒரு சின்னஞ்சிறு
மலராக பூத்திருந்தது
நீ வரும் பாதையில்
உன் கூந்தலேர அல்ல
உன் பாதங்களை முத்தமிட...
பூத்துக்குலுங்கும்
நந்தவனத்தில் நீ இருந்தாலும்
உன் கூந்தலில் வசிக்கும்
அந்த ஒற்றை ரோஜாவின்
வாசத்தை நானறிவேன்...
என் வீட்டு தோட்டத்தில்
ரோஜாக்கள் இன்று
ஏனோ மலரவே இல்லை
உன் முக தரிசனத்தை
காட்டு அவைகள் மலரந்துவிடும்...