நிலவே நீ போவதெங்கே

நீல ஆழ்கடலாம் வானில்
ஆயிரம் ஆயிரம் தாரகைகள்
அகல் விளக்காய் மின்மினித்து வழிகாட்ட
வெள்ளியோட வெண்ணிலவே,
" தனியாய் நீ யாரைத் தேடி போகின்றாய்?
உன் காதலியை என்று நினைக்கின்றேன்
சரியா என்று கேட்டேன்", அதற்கு
சொன்னது , நிலவு ", ஆமாம், ஆமாம்
காதலியைத்தான், ஆனால் நான்
போகுமிடமோ நீ வசிக்குமிடமே
பூமி, பூமிதான் அங்குதான் இருக்கின்றாள்
நான் தேடும் காதலி" என்று சொல்ல,
நான் கேட்டேன் நிலவை,'நிலவே உங்கள்
தேவலோகத்தில் இல்லா அழகு அப்சரஸா
இங்கு எங்கள் மண்ணுலகில் உள்ளார் ,
அதற்கு நிலவு சொன்னது,'நான் தேடும்
காதலி ரம்பா, ஊர்வசி அல்ல அல்ல
தமயந்தி ஒத்த மண்ணுலக எழிலரசி
கற்புக்கரசியைத்தான் " என்றது
இப்போது புரிகின்றது எனக்கு,
அன்று சுயம்வரத்தில் தமயந்தியை
அடையமுடியா சந்திரனுக்கு இன்னும்
மண்ணிலே மங்கையரை அடையும் மோகம்
விடவில்லையோ என்று.
"அக்கரைக்கு, இக்கரை பச்சையோ?
யாரறிவார்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Feb-18, 2:38 am)
பார்வை : 340

மேலே