மகிழ்ச்சி

விடுமுறை நாளில்
தொடங்கியது பாடம்
மகிழ்ச்சியோடும்
குதுகலத்தோடும்

அன்பு
பாசம்
ஏக்கம்
கற்பனை என
சுகமான நினைவுகளை
கலந்து
வகுப்பெடுத்தாள்
பாட்டி

முதியோர் இல்லத்திலிருந்து
பேர குழந்தைகளுக்கு

எழுதியவர் : ந.சத்யா (22-Feb-18, 10:46 am)
Tanglish : magizhchi
பார்வை : 148

மேலே