ஒற்றை ரோஜா

ஆயிரம் அழகு ரோஜாக்கள்
கண்முன்னே பூத்துக் குலுங்கினாலும்
உன் கூந்தலில் வந்து சேர்ந்த
ஒற்றை ரோஜா மாத்திரம்
அத்தனை பேரழகாய் ஆவதைக் கண்டு ,
உன்னிடம் வந்து சேரத் துடிக்கும்
என் காதலையும் ஏற்று
உன் நெஞ்சில் சூடி என்வாழ்வையும்
வசீகரமாய் நீ ஆக்கக் கூடாதா ?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (22-Feb-18, 12:02 pm)
Tanglish : otrai roja
பார்வை : 143

மேலே