அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 11

"எம்.ஜே....எம்.ஜே.. கம் ஆன் லைன், அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட்" என்று ஒலித்தது எம்.ஜே.வின் வாக்கி டாக்கி.

"மிஸ்டர் கென்னடி, எனக்கு அழைய்ப்பு வருகிறது, நான் என்ன என்று கேட்டுவிட்டு வரலாமா?" என்றாள் எம்.ஜே.

"தாராளமாக, நீ என்ன என்று கேள், நான் மருத்துவமனைக்கு அழைப்பு கொடுக்கிறேன்" என்றார் கென்னடி.

தனது வண்டியில் பொருத்தி இருந்த தனது வயர்லெஸ்ஸை எடுத்து "எஸ், ஷெரிங்க்டன் க்ரைம் டிவிஷன் ட்ரைனி 445 எம்.ஜே. ஆன் லைன்" என்றாள் எம்.ஜே.

"அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட் பேனல் இன்சார்ஜ் ஷான், நீங்கள் கூறியது போல ரயில் எண் 84 ல் நீங்கள் புகைப்படம் அனுப்பிய அந்த நபர் இல்லை, நாங்கள் இவ்வளவு நேரம் பெட்டி பெட்டியாக தேடிவிட்டோம், ஆனால் அவர் வண்டியில் இல்லை, வண்டியில் இருந்த அனைவரிடமும் புகைப்படத்தை காட்டி விசாரித்தோம், அதில் ஒரு பெட்டியில் இருந்தவர்கள் அந்த நபரை பார்த்ததாகவும் ஆனால் அவர் கேர் லாஸிலே நிலையத்தில் இறங்கி வேகமாக எங்கோ ஓடிச்சென்றதாகவும் சொன்னார்கள், மேலும், அவர் பார்ப்பதற்கே மிகவும் பதற்றமாகவும் ஒரு நிதானத்தில் இல்லாத மாதிரியும் இருந்ததாக கூறினார்கள்" என்றார் அலெக்ஸ்சாண்ட்ரியா ஸ்டேஷன் கண்ட்ரோல் போர்ட் பேனல் இன்சார்ஜ் ஷான்.

"எம்.ஜே.வின் மூளை வேகமாக வேலை செய்யத்தொடங்கியது. "வேறு ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்றாள் எம்.ஜே.

"ஆமாம், அவர் கேர் லாஸிலே நிலையத்தில் இறங்க பத்து பதினைந்து நிமிடங்கள் முன்பு அவருக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேசும்போது அவரது வார்த்தைகள் மிகவும் உக்கிரமாக இருந்தன என்று சொன்னார்கள்" என்றார் ஷான்.

"அது என்ன வார்த்தைகள் என சொல்ல முடியுமா?" என்றாள் எம்.ஜே.

"எதிர் முனையில் பேசியவர் என்ன பேசினார் என்பது தெரியவில்லை, ஆனால் இவர் மிகவும் அடிபட்டு இருந்தார், யாரோ அவரை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள் என நினைக்கிறேன், அது மட்டும் அல்ல அவரது கழுத்தில் ஏதோ கயிறு கட்டி இருந்தாற்போல சுவடுகள் இருந்தன, அதனால் ஒன்று யாரோ அவரை கயிற்றால் கழுத்தை நெரித்திருக்க வேண்டும், இல்லை என்றால் முகத்தை மூடி கட்டி இருக்க வேண்டும். அந்த அழைப்பு வந்தவுடன் முதலில் வலியால் பேசுவது போல பேசினார், பிறகு கோபமாக கத்தினார், பிறகு அழுதார், பிறகு மீண்டும் கத்தினார், மிகவும் கோபமான வார்த்தைகள் பேசியதாக தான் சொன்னார்கள்" என்றார் ஷான்.

"ஏதாவது வார்த்தைகள் தெரிந்ததா?" என்றாள் எம்.ஜே.

"முழுமையாக கேட்கவில்லை, ஆனால் என் தந்தையை காப்பாற்றி இருக்க முடியும் ஆனால் இந்த காவல் துறை அநியாயமாக எண் தந்தையை கொன்று விட்டது, நிலையை புரிந்துகொள்ளாமல் என்மேல் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை என்ற பெயரில் காவலர்களை தாக்கினேன் என சொல்லி எனக்கு கொடிய தண்டனைகளும் கொடுத்துவிட்டனர், அவர்கள் எல்லாம் என்றுமே மன்னிக்கப்பட மாட்டார்கள், எந்த வகையிலாவது அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று சொன்னதாக தெரிகிறது" என்றார் ஷான்.

உஷாரானாள் எம்.ஜே. "அவர் கேர் லாஸிலே ஸ்டேஷனில் இறங்கி எந்த பக்கமாக போனார் என தெரியுமா?" என்றாள் எம்.ஜே.

"அதை நான் சி சி டீ வி மூலமாக பார்க்க சொல்லி கேர் லாஸிலே நிலையத்திற்கு சொல்லி இருக்கிறேன், அவர்கள் பார்த்துவிட்டு கூறுவதாக சொல்லி இருக்கிறார்கள்" என்றார் ஷான்.

"சரி, எந்த தகவல் கிடைத்தாலும் உடனே தெரியப்படுத்தவும்" என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள் எம்.ஜே.

அவளது மூளை வேகமாக நகரத்தொடங்கியது.

என்ன நடந்திருக்கும் என தீவிரமாக பல கோணங்களில் யோசிக்கத்தொடங்கினாள் எம்.ஜே.

இதற்கிடையே மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு பேசினார் கென்னடி.

"ஷெரிங்க்டன் சீப் இன்வெஸ்டிகேட்டர் கென்னடி, க்ரைம் இன்டெலிஜென்ஸ் போர்ஸ்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் கென்னடி.

"வணக்கம், இது சிருர்ஜி டிக்ஸ் 30 ,சொல்லுங்கள், உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?" என்றார் அந்த தொலைபேசி ஆபரேட்டர்.

"இங்கே காயின் டக்ளஸ் சந்திப்பில் நடந்த ஒரு விபத்தில் மூன்று காவலாளிகள் இறந்த சடலங்களை போஸ்ட் மார்ட்டம் செய்ய உங்கள் மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தோம், என்ன ஆனது என்று தகவலுக்காக அழைத்தேன்" என்றார் கென்னடி.

"நீங்கள் அனுப்பிய சடலங்கள் வந்து சேர்ந்துவிட்டன, ஆனால் இப்போது கொரோனர் வருவதற்காக காத்திருக்கிறோம், அவர் வந்ததும் தொடங்கப்படும், தொடங்கும் முன்பு எச்.டீ.எ. மூலமாக எங்களுக்கு அப்ரூவல் வாங்குவதற்கு நான் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்துவிட்டேன், அனைத்து கோப்புகளிலும் கையெழுத்து ஆனபின் போஸ்ட் மார்ட்டம் தொடங்கும், பிறகு இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் உங்களுக்கு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்" என்றார் மருத்துவமனை அதிகாரி.

"சரி, எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள், முடிந்தவரை விரைவாக முடிவுகள் தர முயற்சி செய்யவும்" என்றார் கென்னடி.

"என்ன எம்.ஜே., ஏதும் தகவல் கிடைத்ததா?" மருத்துவமனை இணைப்பை துண்டித்துவிட்டு காத்திருக்கும் எம்.ஜே. விடம் கேட்டார் கென்னடி.

"மிஸ்டர் கென்னடி, ஒரு முக்கியமான விஷயம், அலெக்ஸ் அலெக்ஸ்சாண்ட்ரியா நிலையத்தை அடையவே இல்லை, கேர் லாஸிலே நிலையத்திலேயே இறங்கி விட்டாராம், எனக்கு சந்தேகம் அலெக்ஸ் மேல் வலுக்கிறது, ஏனென்றால் வண்டியில் அவர் இல்லை என்றதும் வண்டியில் இருந்த அனைவரிடமும் புகைப்படத்தை காட்டி விசாரித்திருக்கிறார், அதில் ஒரு பெட்டியில் இருந்தவர்கள் அலெக்ஸை பார்த்ததாகவும் ஆனால் அவர் கேர் லாஸிலே நிலையத்தில் இறங்கி வேகமாக எங்கோ ஓடிச்சென்றதாகவும் சொல்லி இருக்கிறார்கள், மேலும், அவர் பார்ப்பதற்கே மிகவும் பதற்றமாகவும் ஒரு நிதானத்தில் இல்லாத மாதிரியும் இருந்ததாக கூறி இருக்கிறார்கள், அது மட்டும் அல்ல, அவர் அந்த ஸ்டேஷனில் இறங்குவதற்கு பத்து பதினைந்து நிமிடங்கள் முன்னால் அவருக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை ஏற்று பேசும்போது அவரது வார்த்தைகள் மிகவும் உக்கிரமாக இருந்தன என்று சொல்லி இருக்கிறார்கள். மேலும் இவர் மிகவும் அடிபட்டு இருந்ததாகவும், யாரோ அவரை கடுமையாக தாக்கி இருக்கக்கூடும் என்றும், அவரது கழுத்தில் ஏதோ கயிறு கட்டி இருந்தாற்போல சுவடுகள் இருந்ததாகவும், யாரோ அவரை கயிற்றால் கழுத்தை நெரித்திருக்க வேண்டும், இல்லை என்றால் முகத்தை மூடி கட்டி இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். அந்த அழைப்பு வந்தவுடன் முதலில் வலியால் பேசுவது போல பேசி இருக்கிறார், பிறகு கோபமாக கத்தி இருக்கிறார், பிறகு அழுதும் கத்தியும் கோபமான வார்த்தைகளை பேசியும் இருக்கிறார், எல்லாவற்றிற்கும் மேலாக தனது தந்தையை காப்பாற்றி இருக்க முடியும் ஆனால் இந்த காவல் துறை அநியாயமாக என் தந்தையை கொன்று விட்டது, நிலையை புரிந்துகொள்ளாமல் என்மேல் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை என்ற பெயரில் காவலர்களை தாக்கினேன் என சொல்லி எனக்கு கொடிய தண்டனைகளும் கொடுத்துவிட்டனர், அவர்கள் எல்லாம் என்றுமே மன்னிக்கப்பட மாட்டார்கள், எந்த வகையிலாவது அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் உக்கிரமாக பேசி இருக்கிறார்" என்றாள் எம்.ஜே.

கென்னடி ஒரு நிமிடம் தனது மகனின் உயிர் நண்பன், இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி இருக்கிறான் என அறிந்து மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தார், பிறகு தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, "சரி, இப்போது என்ன அடுத்த நடவடிக்கை செய்திருக்கிறாய்?" என்றார் கென்னடி.

" கேர் லாஸிலே நிலையத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு சொல்லி சி.சி.டீ.வி. பதிவுகளை பார்க்க சொல்லி இருக்கிறேன்" என்று சொன்னாள் எம்.ஜே.

"சரியான ஸ்டேப், உன்னுடைய யூகம் இப்போது என்ன?" என்றார் கென்னடி.

"மிஸ்டர் கென்னடி, நாம் இங்கிருந்து கிளம்பலாமே, நிலையத்திற்கு சென்று பேசிக்கொள்ளலாம்" என்றாள் எம்.ஜே.

"ஆமாம் ஆமாம் நேரம் ஆகி விட்டது, ஓ, இன்னும் இரண்டு மணி நேரத்தில் பொழுது விடிந்து விடும், மிகவும் குளிராக வேறு இருக்கிறது, ஒரு சிகரெட் பிடிக்கலாமா?" என்றார் கென்னடி சிரித்துக்கொண்டே.

"ஓ தாராளமாக, என்ன ப்ராண்ட்?" என்றாள் எம்.ஜே. சிரித்துக்கொண்டே.

"ஹெட்ஜெஸ் கோல்ட்" என்றபடியே கையில் சிகரெட் பெட்டியை எடுத்தார் கென்னடி.

"ஓ எனது பேவரைட் ப்ராண்ட்" என்றபடி சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தாள் எம்.ஜே.

இருவரும் அவரவர் வந்த காரில் ஏறி ஷெரிங்க்டன் நிலையம் நோக்கி விரைந்தனர்.

மாண்ட்ரியலில் ஜொஹான் - மெர்சி இருவரும்.....

"ஜொஹான், இன்னுமா உனக்கு உறக்கம் வரவில்லை?" என்றாள் மெர்சி.

"ஆமாம், எனக்கு என்னவோ அலெக்ஸ் மிகவும் துன்பப்பட்டுவிட்டானோ என தோன்றுகிறது, அவனை நேரில் பார்க்க வேண்டும், அதுவரை என்னால் சமாதானமாக முடியாது" என்றான் ஜொஹான்.

"எல்லாம் சரி ஆகி விடும் ஜொஹான், அலெக்ஸ்க்கு ஒன்றும் ஆகி இருக்காது, அதான் நீ அவனிடம் பேசிவிட்டாய் அல்லவா?" என்றாள் மெர்சி.

"ஆமாம், அந்த ஒரு சிறிய சமாதானம் தான், ஆனால் அவனுக்கு கொடுத்த தண்டனைகளை தான் கேள்விப்பட்டாயே, மிகக்கொடுமை ஆனது. பாவம்" என்றான் ஜொஹான்.

"உன் அம்மா மிகவும் அழகாக இருக்கிறார் ஜொஹான், புகைப்படத்தை விட நேரில் மிக அழகாக இருக்கிறார், அது சரி, இன்னும் ஆஷ்லே ஏன் வரவில்லை, இன்று வருவாள் என சொன்னாயே, பொழுதே விடியப்போகிறது, ஆனால் இன்னும் வரவில்லையே?" என்றாள் மெர்சி.

"அவளா, வந்திருப்பாள், ஆனால் அவளது தோழி, கரோலின் வீட்டிற்கு போய்விட்டு தான் வருவாள், நானும் அலெக்ஸும் எப்படியோ அப்படித்தான் அவர்கள் இருவரும்" என்றான் ஜொஹான்.

"ஓ அற்புதம், அவளை பார்க்க வேண்டும், மிகவும் இன்டெரெஸ்ட்டிங் கேரக்டர் அவள்" என்றாள் மெர்சி.

"ஆமாம், விடிந்தவுடன் வந்து விடுவாள், அவள் தனது தோழி கரோலினையும் கூட்டி வருவாள், நாளை நல்ல பொழுது கழியும், புத்தாண்டும் இனிமையாக இருக்கும், இப்போது தான் எனது மெசேஜ்களை பார்த்தேன், ஸ்கார்லெட்டும் மைக்கேலும் கூட வருகிறார்களாம் மாண்ட்ரியலுக்கு... ஆனால் அலெக்ஸ் இருக்க மாட்டான், அது ஒரு வருத்தம், எனது தந்தை பணிக்கு சென்றுவிட்டார், அது ஒரு வருத்தம்" என்றான் ஜொஹான்.

"நான் தான் உன்னுடன் இருக்கிறேனே, எல்லா வருத்தங்களையும் முத்தத்தால் போக்குகிறேன்" என்றபடி உதட்டில் முத்தமிட்டாள் மெர்சி. பிறகு "நான் இப்போது தான் உன் வீட்டிற்கு முதன் முதலில் வருகிறேன், பென்னெட்ஸ் பாரடைஸ், நல்ல பெயர், " பெயருக்கேற்றாற்போல சொர்கம் போலவே இருக்கிறது" என்றாள் மெர்சி.

கென்னடி நிலயத்தி அடைய ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எம்.ஜே. வேகமாக நிலையம் வந்து சேர்ந்திருந்தாள்.

அப்போது எம். ஜே.வின் வாக்கி டாக்கி மீண்டும் கனைத்தது.

" கேர் லாஸிலே கண்ட்ரோல் போர்டு ஆபீசர் ஜெரோம், ஷெரிங்க்டன் ட்ரைனி ஆபீசர் 445 ப்ளீஸ் கம் ஆன் லைன்" என்றார் அந்த பக்கத்தில் இருந்த கேர் லாஸிலே கண்ட்ரோல் போர்டு அதிகாரி ஜெரோம்.

"யா, எம்.ஜே. ஆன் லைன்" என்றாள் எம்.ஜே.

"நீங்கள் அனுப்பிய புகைப்படத்தில் இருக்கும் நபர் கேர் லாஸிலே ஸ்டேஷனில் இறங்கி கேர் காண்டியாக் போகும் ரயில் எண் முப்பதில் ஏறி சென்றிருக்கிறார். தோராயமாக எட்டு மணி இரவுக்கு ஏறி இருக்கிறார். அந்த ரயிலானது டெர்மினஸ் அங்கிறிஞன் நிலையம் வரை செல்லும் வண்டி, அந்த நபர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வந்திருப்பதால் அவர் வெறும் மூன்று மார்க்கத்தில் தான் சென்றிருக்க முடியும், ஏனென்றால் அந்த நிலையத்தில் இருந்து மூன்றே மூன்று கிழக்கு மார்க்கத்திற்கு தான் வண்டிகள் செல்கின்றன. ஒன்று ப்ரோஷர்ட் மார்க்கம், இரண்டு மாண்ட்ரியல் மார்க்கம், மூன்று ஷெரிங்க்டன் நேப்பியர்வில்லே மார்க்கம்." என்றார் ஜெரோம்.

ஆடிப்போய் நின்றாள் எம்.ஜே. சிந்தனை மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது.

திகில் தொடரும்.

பகுதி 11 முடிந்தது.

எழுதியவர் : முபாரக் (22-Feb-18, 5:59 pm)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 240

மேலே