ஆசை
ஆசையெனும் கடலிலே
மனிதன் நீந்தி
'கரை' ஏறபார்க்கிறான்
தத்தளிக்கிறான், கரையில்
ஒருவன்*, இவனைப்பார்த்து
வந்துனை 'கரையேத்தவா'
என்கிறான், அப்போது
இவன் கூறுகிறான்
'எனக்கோர் ஆசை'
அதற்கு அவன்
'ஆசையை விட்டுவிடு'
கரையேறலாம் என்றிட
இவன் 'ஆழ்கடலில்' மூழ்கிப்போனான்.
(ஒருவன் : குரு,இறைவன்)