மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 20

# மூர்ச்சையற்ற பொழுதுகள் - ௨௦

தான் காதலிக்கும் பெண்ணின் எதிரிலேயே இன்னொருவன் லவ் ப்ரொபோஸ் செய்வதை பார்ப்பது கொடுமையாக இருந்தது என்றால்,அதை தடுக்கவும் தட்டி கேட்கவும் முடியாமல் வெறும் பார்வையாளன் போல நிற்பது அதிலும் கொடுமைதான் அதுதான் கார்த்திக்கும் நிகழ்ந்தது..
மாலதியின் முகத்தில் வெட்கத்தையும் சிரிப்பையும் மட்டுமே பார்த்து பழகியிருந்த கார்த்திக்கு ,அவளின் முகமொழி மாறுவது தெளிவாக தெரிந்தது ..

அவள் விழி இரண்டிலும் மிரட்சி படர்ந்திருந்தது..
முகத்தில் காதல் ரேகைகள் வறட்சியக்கிருந்தது ..
வார்த்தைகளில் கடும்எரிச்சல் கலந்திருந்தது ..
"வழியை விடுங்கள்" என்று சொல்லி அவர்கள் மூவரின் முகத்தையும் ஏறிட்டு பார்க்காமல் வேகவேகமாய் இறங்கி சென்றாள்..
பேருந்து அவளை கீழே இறக்கி விட்டிருந்தது..கார்த்திக் இதயத்திலிருந்து அவளை இறக்கி விட முடியாமல் சுமைதாங்கி கல்லை போல தனித்து விடப்பட்டு நின்றான்..

எதனால் மாலதி கோபமாக செல்கிறாள் ..அவன் லவ் ப்ரொபோஸ் பண்ணியதா இல்லை நான் இதுவரை அவளிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணாததாலா..ஒருவேளை நான் லவ் சொன்னா கூட இப்படிதான் கோப படுவாளோ ..
மாலதி தன்னை பற்றி என்ன நினைத்து இருப்பாள் ..
அவள் என்னை தவறாக நினைத்தாலும் பரவாயில்லை.,
அந்த ஒரு நிமிடமாவது அவளுக்குள் என் நினப்பு வந்து செல்லாதா என்ற எண்ணம் அவனை ஆறுதல் படுத்தியது..

அவள் சென்றதும் அவனும் முகத்தை தொங்க போட்டு கொண்டு பஸ்ஸில் இருந்து இரங்கி சென்றான்..சற்றுமுன் மாலதியிடம் லவ் ப்ரொபோஸ் புண்ணியவான் பெயர் குமார் பக்கத்துக்கு ஊரு பையன் ..பைக் மெக்கானிக் ஒர்க்கஷாப் வைத்து இருக்கிறான்...
கார்த்திக் அவளை விரும்புவது கூட அவனுக்கு தெரியாது..
கார்த்திக்கும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளாமல் நின்று கொண்டான்..
இது இத்துடன் முடிந்து விட்டது இனிமேல் அவன் வரமாட்டன் என கார்த்திக் நினைத்து கொண்டிருந்தான் ..மீண்டும் ஒரு நாள் அவனை பார்க்கத்தவரை....

மறுநாள் எப்போதும் போல காத்திருந்தான் கார்த்திக் ..
அவள் வரவில்லை...
எல்லா பேருந்தும் வெறுச்சோடி காட்சியளித்தது போல பிரமை அவனுக்குள்..
ஒருநாளும் அவன் காத்திருந்து அவளை பாராமல் ஏமாற்றத்துடன் திரும்பியதில்லை..
நேற்று நடந்த நிகழ்வுக்காக தன்னை தவிர்த்திருப்பாள் என்று நினைத்தான் கார்த்திக்..
பின்புதான் தெரிந்தது அவள் பள்ளிக்கூடமே வரவில்லை என்று..
மூன்று நாட்களாய் அவள் வராத பேருந்தில் நடை பிணமாய் பயணித்தான்..
அவள் வராததற்க்கு காரணம் எதுவென்று தெரியவில்லை,ஆனால் மனசு மட்டும் ஏதோ பாறையின் இடுக்கில் சிக்கிய மிருகத்தை போல ரணத்தோடு போராடி கொண்டிருந்தது.

மூன்றாம் நாள் காலையில் அவள் தூரத்தில் வருவது தெரிந்ததும்,அவளின் விழிகளை பார்க்க சக்தியற்று தன்னை கூட்டத்துக்குள் மறைத்து கொண்டான்..
மாலையின் அவளுக்கு முன்பாய் பேருந்தில் போய் விடலாம் என்று கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் தனது நண்பர்களோடு நிற்க..
அவளும் அவளுடைய தோழிகளோடு வந்து கொண்டிருந்தாள்..
அவளின் இடது கை நெஞ்சில் புத்தகங்களை சுமந்த படி கார்த்திக்கை பார்க்க.,
கார்த்திக்கின் இடது நெஞ்சின் இதயத்தில் காதலை சுமந்த படி மாலதியை பார்க்க..
அந்த நிமிடங்கள் பார்வைகள் மட்டுமே இருவருக்குள்ளும் நெருப்பை மூட்டி கொண்டிருந்தது ..
சலீம் இருவரின் இடையில் வந்து அவளை பாராதபடி வேணுமென்றே மறைக்க,
கார்த்திக்கும் ரோசப்பட்டு அவளை பார்க்க மாட்டேனென்று அவளை விட்டு மறைய,.
நகர பேருந்தும் மறைவான இடத்திலிருந்து நகர்ந்து நெருங்கி வர,
கூட்டமெல்லாம் பேருந்தை நோக்கி நகர..
கார்த்திக் மீண்டும் அவளை தேட..
அவள் பேருந்தையும் அவனையும் தவிர்த்து விட்டு மீண்டும் பள்ளியினுள் சென்று கொண்டிருந்தாள்..
-ஏன் வந்தாள்..
பேருந்திலும் ஏறவில்லை.
-எதற்காக என்னை பார்த்து நின்றாள்.
என்னுடனும் வரவில்லை.
-இவ்வளவு நேரம் நின்ற விட்டு பேருந்து வரும் போது ஏன் திரும்பி சென்றாள்.
-என்னை பார்த்தவுடன் செல்வதற்க்கும்,
என்னை பார்த்து விட்டு செல்வதற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன..
அவன் நெஞ்சு கூட்டிற்குள் இருந்து இதயம் மட்டும் சதையை பிய்த்து கொண்டு திக்கு திசை தெரியாமல் பறப்பது போல் இருந்தது..
இந்த பொண்ணுங்களை புரிந்து கொள்ள புதுசா ஒரு இரவல் இதயம் கொடு கடவுளே என கார்த்திக்கின் மனம் கதறியது..
அந்த சம்பவத்திற்க்கு பிறகு சில நாளாய் கார்த்திக்கிடம் அவள் எட்டி நின்று பேசுவதும் இல்லை ஒட்டி நின்று மெய் தீண்டுவதுமில்லை..
தீண்டாமை என்பது பாவச்செயல் என்று அவளுக்கும் தெரியும்.அதனால்தான் என்னவோ தினமும் பார்வைகளால் மட்டுமே அவனை தீண்டி சென்றாள்..

அன்று எதிர்பாராத விதமாய் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைக்கு எதிரே கார்த்திக்கின் எதிரில் வந்தாள் மாலதி..
நெற்றியில் சந்தனம்,அதனில் சிறு குங்குமம்,இதழலெல்லாம் சிறு புன்னகையுடன் நெஞ்சில் நோட் புத்தகத்தை அணைத்தபடி அவனை எதிரில் பாராமல் மிக அருகில் வந்துவிட்டாள்.. அவளை பார்த்ததும் கார்திகாலும் உடனே விலக முடியவில்லை,
அவன் விலகி செல்வான் என்று எதிர்பார்த்து இருப்பாள் போல,
இருவரும் முட்டிக்கொள்ளும் நூல் அளவில்,இடித்து விடாதபடி சுதாரித்து விலகி விட்டாள்..
அவளும் இதை எதிர்பார்க்கவில்லை,அவனும் அதை எதிர்பார்க்க வில்லை..
விலகிய அவன் உடல் மட்டும் அதே இடத்தில் தனியாய் நின்றது.
அவள் உடல் மட்டும் திரும்ப திரும்ப திரும்பி பார்த்து கொண்டே நகர்ந்து சென்றது..
அவளை தொடர்ந்து அவன் உயிர் மட்டும் அவளுக்கு முன்னால் ஆலாய் பறந்து சென்றது ..
அவனுக்குள் இனம் புரியாத உணர்வுகள் எங்கிருந்தோ வந்து இம்சை செய்தது..
அகிம்சையை கற்று கொடுத்த அவளின் விழிகளால் இன்று இதயத்திற்குள் காதல் கலகம் கட்டவிழ்க்ககப் பட்டிருந்ததை அவள் அறியாமலே கடந்து செல்கிறாள்..

மாலை பேருந்தில் அவள் கார்த்திக்கு முன் நின்று கொண்டிருந்தாள்..
அவளின் விரல்கள் கார்த்திக்கின் விரலை பற்றியது..அவளின் விரல்கள் தெரியாமல்தான் படுகிறது என்றென்னி அவன் பின்னோக்கி கரங்களோடு சேர்த்து இழுத்து கொண்டான்...
அவளோ அதை கண்டும் காணாததுமாய் நின்று கொண்டாள்..
அவளின் நிறுத்தம் நெருங்கி வர,கார்த்திக் அவளை விட்டு விலகி அவள் இறங்க வரும் படியில் நின்று கொண்டான்...
"விசிலை ஊதுங்களேன்"என்று நடத்துனரிடம் அவள் வேண்டுகோள் விடுத்ததும்,பேருந்து நின்றது..
அவள் கார்த்திக்கை நெருங்கி வந்து அவன் நின்றிருந்த படியின் வழியாக அவனை உரசியபடி இறங்கினாள்.கார்த்திக்கின் கையில் இருந்த புத்தகத்திலிருந்து அன்று எழுதிய கவிதை பேப்பர் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்தது..,
பஸ்சை விட்டு இறங்கியவள் போகாமல், கீழே விழுந்த கவிதை பேப்பரை கையில் எடுத்து கார்த்திக்கை ஏறிட்டு பார்த்தாள்...
கார்த்திக்குள் சந்தோஷ ஹார்மோன்கள் சறுக்கு விளையாட்டு விளையாடியது,.
அவள் பார்க்கையில் கார்த்திக்கும் கடைசி படிக்கட்டில் நின்று மாலதியை பார்த்தான்..
இருவரின் கண்களிலும் காந்த மின் அலைகள் ஒன்றோடு ஒன்று ஈர்த்து கொண்டிருந்தது..

அவர்களின் இருவரது பார்வையையும் சேர்த்து பார்த்த அந்த மூன்றாவது ஒரு ஜோடி விழிகள் அதிர்ச்சியில் உறைந்திருந்தது..

காதல் அரங்கேற்றம் தொடரும்...

எழுதியவர் : சையது சேக் (24-Feb-18, 6:02 pm)
பார்வை : 197

மேலே