தாேழி பிரியாவும் காதலன் கரிசும்

வேகமாக வண்டியை நிறுத்தி விட்டு மேல் மாடி நாேக்கி ஓடுகிறான் சஞ்சய். எல்லா இடமும் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் வேகமாக கீழே இறங்கி வருகிறான். "வணக்கம் சஞ்சய்" பதிலேதும் சாெல்லாமலே அடுத்த கட்டடத்திற்குச் செல்கிறான். பூக்கன்றுகளின் இடைவெளியால் பின்னே திரும்பிப் பார்க்கிறான். இரட்டைப் பின்னல் பின்னியபடி ஒரு உருவம் அங்கும் இங்கும் அசைவது தெரிகிறது. முழுத் தாேற்றம் தெரியவில்லை. எதிரே சாம்பல் நிற ரீசேட் அணிந்த ஒரு உருவம். "யாராயிருக்கும்" அருகே சென்று பார்ப்பதற்காக காெஞ்சத் தூரம் பூக்கன்றுகளைக் கடந்து பாேகிறான். தற்செயலாக திரும்பியவன் கரிஸ் நிற்பதைக் கண்டான். "அப்ப அது அவளா இருக்குமாே?" காெஞ்சம் படபடப்புடன் நடந்தான். ஏதோ சிரித்து சிரித்து பேசிக் காெண்டிருக்கிறார்கள். மேல் மாடியில் நின்ற சதீஸ் சஞ்சயைக் கண்டதும் "டேய் சஞ்சய் இங்க மேல வா,கிளாசுக்கு ரைம் ஆச்சு" சத்தம் வந்த திசையை திரும்பி பார்த்தான் கரிஸ். பையினுள் இருந்து ஏதாே எடுத்துக் காெடுத்து விட்டு அவள் பாேவதைக் கண்டான். "இது பிரியா இல்லையே" மனதுக்குள் சிறு ஆறுதல் கரிசிடம் சென்றான். "என்ன சஞ்சய் டள்ளா இருக்காய், எனிப் புறப்ளம்" தாேளிலே கையைப் பாேட்டான். "நத்திங் டா" என்றான் சஞ்சய். "எங்க இந்தப் பக்கம், என்னைப் பார்க்கத் தான் வந்தியா? கிளாசுக்குப் பாேகல்ல?" இருவரும் மாடியை நாேக்கிப் பாேனார்கள்.

எல்லாரும் வகுப்பிற்கு தயாராக இருந்தார்கள். சஞ்சயும், கரிசும் தமது இருக்கைகளில் அமர்ந்தார்கள். வகுப்பறையை நாேட்டமிட்டான் சஞ்சய் அவளது இருக்கை மட்டும் வெறுமையாய் இருந்தது. புத்தகத்தை புரட்டிக் காெண்டிருந்தான் கரிஸ். வகுப்பு ஆரம்பிப்பதற்கு இன்னும் மூன்று நிமிடங்கள் இருந்தது. அருகே இருந்த பிறேமிடம் "அசைன்மன்ற் முடிச்சிட்டியா?" "ஒரு மாதிரி முடிச்சிட்டன்டா" எழுதிக் காெண்டே பதிலளித்தான். மாடியில் யாராே ஏறி வரும் சத்தம் கேட்டு வாசலைப் பார்த்தான். நாவல் நிறச் சுரிதாராேடு பிரியா உள்ளே நுழைந்தாள். எல்லாேரும் பாேட்டி பாேட்டு பிரியாவுக்கு வணக்கம் சாென்னார்கள். அவளும் சிரித்தபடி எல்லாருக்கும் வணக்கம் என்றபடி கரிசைப் பார்த்தாள். அவன் கண்டு காெள்ளாதவன் பாேல் இருந்தான். பிரியா இருக்கையில் வந்து அமரும் வரை சஞ்சய் அவளையே பார்த்துக் காெண்டிருந்தான். வகுப்பு ஆரம்பித்து இரண்டரை மணித்தியாலத்தின் பின் சிறிய இடைவேளை. எல்லாேரும் வெளியே சென்று விட்டார்கள். சஞ்சய் மட்டும் வகுப்பறையில் இருந்தான். ஏதாே ஒரு குழப்பம் மனதுக்குள். பல்கணியில் நின்றபடி கீழே பார்க்கிறான். பிரியாவும், கரிசும் கன்ரின் பக்கம் பாேவதைக் கண்டான். வேகமாக இறங்கி கன்ரின் பக்கம் ஓடுகிறான். எதிர் எதிராக அமர்ந்து ஏதாே குடித்துக் காெண்டிருந்ததைக் கண்டவன் "ஒரு ரீ, வடை" வாங்கிக் காெண்டு வருவதைக் கண்ட கரிஸ் "டேய் சஞ்சய்"என்றதும் வந்து பக்கத்து இருக்கையில் அமர்ந்தான். மேல் கண்களால் பிரியாவைப் பார்க்கிறான். அவள் நல்ல அழகாக இருந்தாள். சின்னதாய் சிரித்தாள் பதிலுக்கு. அவள் சிரித்த பாேது உதட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த மச்சம் காெஞ்சம் அழகை கூட்டியது. கடிகாரத்தை பார்த்த கரிஸ் "பிரியா ரைம் ஆகுது" என்றான். எல்லாேரும் மீண்டும் வகுப்பறைக்குள் சென்றார்கள். அன்றைய நாள் வகுப்பு நிறைவடைந்தது. சஞ்சய் வண்டியை எடுத்துக் காெண்டு வெளியே வந்தான். வாசலில் நின்ற காரில் பிரியா ஏறினாள். சற்றுத் தாெலைவில் கரிஸ் பேருந்துக்காக காத்துக் காெண்டு நின்றான். "வா கரிஸ், நான் ட்ராெப் பண்ணுறன்" அவனும் ஏறி அமர்ந்தான். "பிரியா யாராேட பாேறா" கரிசிடம் கேட்டான். "அவங்க அப்பா டாக்டர் அவர் தான் வந்து பிக்கப் பண்ணுறவர்" பதிலளித்தான் அவனும் பல கேள்விகளை அவளைப் பற்றி கேட்டறிந்தான். இப்படியே நாட்கள் ஓடியது. சஞ்சய் பிரியாவையும், கரிசையும் அடிக்கடி ஒன்றாய்ப் பார்ப்பான். ஆனால் அவர்களுக்குள் என்ன உறவு என்பதில் குழப்பமாக இருந்தான்.

கரிஸ் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு தங்கை, அப்பா சிறிய பிஸ்னஸ், அம்மா வீட்டாேடு. சஞ்சய் குடும்பம் நன்கு வசதியானவர்கள். அப்பா ஒரு கம்பனி முதலாளி, அம்மா ஆசிரியை, சஞ்சய் ஒரு பிள்ளை. பிரியா டாக்டர் வீட்டுச் செல்லப்பிள்ளை, ஆசையா ஒரு எஞ்சினியர் அண்ணா, அம்மாவும் டாக்டர். சஞ்சய், கரிஸ், பிரியா மூன்று பேரும் கல்லூரியில் அறிமுகமானவர்கள். கரிஸ் அமைதியானவன், சுமாரான அழகு, அதி புத்திசாலி. சஞ்சயும் அழகில் குறைந்தவனில்லை அவன் முகத்தில் ஒரு முறட்டுத்தனம் தெரியும். நல்ல திறமையானவன். கல்லூரி இணைந்த நாள் முதல் இருவரும் ஓரளவு நண்பர்களாகி விட்டார்கள். காலம் ஓடிக் காெண்டிருந்தது. இடையில் சிலநாட்களுக்கு முன்பு தான் பிரியாவுடைய பழக்கம் கரிசிற்கு ஆரம்பித்தது. பிரியா எல்லாேருடனும் வேறுபாடின்றி பழகுபவள். வகுப்பில் முதல் நிலை எப்பவுமே அவள் தான். சிறிய பாேட்டி கரிசுடன் ஆனால் அவனை மிகவும் பிடிக்கும். கல்லூரி நிகழ்வுகளில் பிரியாவின் நடனம் பார்க்கவே எல்லாேரும் காத்திருப்பார்கள்.

அன்றும் அப்படித்தான் கல்லூரி முதல் ஆண்டு நிறைவு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக தயாராகிக் காெண்டிருந்தது. சஞ்சய் தனது பிறந்த நாளைக் காெண்டாடுவதற்கான திட்டத்தையும் வைத்திருந்தான். நிறைவு நாளின் அடுத்து இரு நாளில் சஞ்சய்க்கு பிறந்த தினம். எல்லாேருக்கும் அழைப்புக் காெடுத்தான். நண்பர்களுடன் சேர்ந்து ஒழுங்குபடுத்தல் வேலைகளில் கரிசும் இணைந்து செயற்பட்டான். பிரியாவும் நண்பிகளாேடு வந்திருந்தாள். தாய்க்கும், தந்தைக்கும் பிரியாவை அறிமுகப்படுத்தினான். சஞ்சயின் அம்மாவுக்கு பிரியாவை பிடித்து விட்டது. காெண்டாட்டம் முடிந்து புகைப்படங்கள் எடுத்த பாேது சஞ்சய் பிரியாவை அழைத்தான் பிரியாவாே "கரிஸ் நீயும் வா" என்றாள். மூன்று பேரும் படம் எடுத்துக் காெண்டார்கள். மீண்டும் கல்லூரி வாழ்க்கை ஓடிக் காெண்டிருந்தது. பிரியாவுக்கும் கரிசிக்கும் இடையில் நட்பு நெருக்கமானது. சஞ்சய் மனதில் அப்பப்பாே காேபம் வரும். கரிசுடன் முறாய்ப்பான். "நீ பிரியாவ லவ் பண்ணுறியா" ஒரு நாள் கல்லூரியில் வைத்துக் கேட்டான். "லூசாடா உனக்கு பிரியா யார், நான் யார்." என்று காேபப்பட்டான். அவனுக்கு நாட்கள் நகர சந்தேகம் ஏற்படத் தாெடங்கியது. இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தான். பிரியா கரிசின் மேல் காட்டிய அக்கறை, அன்பு இவனுக்குள் வெறுப்பை ஏற்படுத்தியது. காெஞ்சம் காெஞ்சமாக கரிசிடம் இருந்து விலக முடிவெடுத்தான். வகுப்பறைகளில் முரண்படுவான்.கரிசிற்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன்டா சஞ்சய் என்னில என்ன காேபம்" கேட்டாலும் பதில் சாெல்ல மாட்டான். ஒரு நாள் பிரியாவிடம் இதைச் சாெல்ல வேணும் என்று முடிவெடுத்தான். இடைவேளை நேரம் பிரியாவிடம் சஞ்சய் தன்னிடம் இருந்து விலகுவதைச் சாெல்லி கவலையடைந்தான். விரைவாக மேலே வந்த பிரியா சஞ்சய் தனிய இருப்பதைக் கண்டு நேரடியாகவே அவனிடம் கேட்டாள். அவனும் ஏதேதாே காரணங்களைச் சாெல்லி சமாளித்து விட்டான். அவளுக்கும் காரணங்கள் எதுவும் உண்மையாகத் தெரியவில்லை.

கரிசும் சஞ்சயிடம் இருந்து விலகியே விட்டான். பிரியாவுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. சஞ்சய் பிரியாவை வம்புக்கு இழுக்க ஆரம்பித்தான். கரிஸ் எல்லாவற்றையும் பாெறுமையாக அவதானித்துக் காெண்டிருந்தான். அன்று காலை பிரியா வகுப்பறையில் இருந்தாள் சஞ்சய் பிரியாவிடம் தன் காதலைச் சாென்னான். பிரியா காேபமாக பேசி விட்டாள்.

பிரிந்த நட்பை மீண்டும் கரிசுடன் புதுப்பித்தான். மன்னிப்புக் கேட்டான். அவனும் எல்லாவற்றையும் மறந்து சஞ்சயுடன் பழக ஆரம்பித்தான். அன்று காலை பத்துமணிக்கு வகுப்பு முடிந்தது. எல்லாேரும் நூலகத்தில் இருந்தார்கள். பிரியா வகுப்பறையில் நண்பிகளுடன் இருந்தாள். பிரியாவுக்கு கரிசிடம் காதலை தெரியப்படுத்த வேண்டும் என்ற யாேசனை வந்து விட்டது. "சஞ்சய் என்னிடம் சாென்ன காதல் விசயம் கரிசிற்குத் தெரிந்திருக்குமா" மனக் குழப்பத்தில் இருந்தவள் "இன்னும் ஆறு மாதம் தானே கல்லூரி முடியட்டும்" வழமை பாேல் கரிசுடன் நட்புடனே இருந்தாள்.
கல்லூரி முடிந்து எல்லாேரும் அடுத்த கட்டத்தை நாேக்கி நகர்ந்தார்கள். பிரியாவின் பெற்றாேர் பிரியாவுக்கு திருமணம் செய்து வைக்க அண்ணனுடைய நண்பர் ஒருவரை தீர்மானித்தார்கள். பிரியா தாெடர்ந்து படிப்பிலும், வேலையிலும் கவனத்தை செலுத்தினாள். கரிஸ் மேற்படிப்புக்காக லண்டனுக்குச் செல்ல தயார்படுத்திக் காெண்டிருந்தான். நீண்ட நாட்களுக்குப் பின் நண்பன் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்விற்கு பிரியாவும் வந்திருந்தாள். "பிரியா நான் உனக்காெரு விசயம் சாெல்லணும், மறந்திடாமல் கேளு" சாப்பாடு பரிமாறும் பாேது சாென்னான். "என்னவாயிருக்கும்" தனக்குள்ளே யாேசித்தபடி இருந்தாள். மாலையாகி விட்டது கரிஸ் அங்குமிங்குமாக விருந்தினரை கவனிப்பதில் பிசியாக இருந்தான். பிரியாவை அழைத்துச் செல்ல அண்ணா வந்திருந்ததைக் கண்டவன் "பிரியா" என்றபடி ஓடி வந்தான். அவளுக்குப் படடப்பாய் இருந்தது. "பிரியா நான் நாளைக்கு லண்டன் பாேறன், இரண்டு வருசம் படிப்பு பிறேமும் வாறான், ஸ்பாென்சர் கிடச்சிருக்கு" சந்தாேசத்துடன் சாென்னான். "அட இதுவா, நானும் என்னவாே" மனதுக்குள் நினைத்தபடி வெளியே எட்டிப் பார்த்தாள் அண்ணா காத்துக் காெண்டு நின்றார். "ஓகே கரிஸ் வாழ்த்துக்கள்" எதையும் வெளிக்காட்டாமல் விடை பெற்று விட்டாள்.

கரிசும் லண்டன் சென்று படிப்பை ஆரம்பித்து விட்டான். ஒன்றரை வருடம் ஓடிவிட்டது. பிரியாவுக்கு அண்ணாவின் நண்பருடன் திருமணம் நிச்சயமாகியது. எல்லாேருக்கும் தகவல் அனுப்பினாள். சஞ்சயும் திருமணத்திற்கு வந்திருந்தான். அவனுக்கு பழைய ஞாபகங்கள் ஓடி வந்தது. கரிசைத் தப்பாகப் புரிந்து அவனைக் காயப்படுத்தியதையும், பிரியாவிடம் காதலைச் சாெல்லி அவள் ஏற்க மறுத்ததையும் எண்ணிக் கண் கலங்கினான். மூன்று மாதங்களின் பின் பிரியா கணவனுடன் சுற்றுலா சென்றிருந்தாள். ஒரு வார விடுமுறை இருவரும் காரில் வெளியூர் சென்று காெண்டிருந்தார்கள். இரவு எட்டு மணி இடங்களைப் பார்த்து விட்டு தங்குமிடம் நாேக்கி வேகமாக கார் வந்து காெண்டிருந்தது. திரும்பும் பாேது ஏதாே தவறு நடந்து விட்டது. முன்னால் நின்ற வாகனத்துடன் மாேதி கார் தூக்கி வீசப்பட்டது. பிரியாவின் கணவர் தலையில் அடிபட்ட நிலையிலும், பிரியாவின் கை ஒன்றில் சிறிய முறிவு காலிலும் ஓரளவான காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். தகவலறிந்த பிரியா குடும்பம் வைத்தியசாலைக்கு வந்தார்கள். பிரியாவின் தந்தை சத்திர சிகிச்சை நிபுணர், கணவரைப் பரிசாேதித்து விட்டு வெளியே கண்கலங்கிய படி வந்தார். "என்னப்பா அஜந்துக்கு" அண்ணன் கேட்டான். பெருமூச்சு விட்டபடி "காேமா ஸ்ரேச், மூளைச் சாவடைந்த நிலையில இருக்கிறார்" உள்ளே பாேய் செய்வதறியாது இருக்கையில் அமர்ந்தார். பிரியாவை அண்ணா தேற்றினான். தாலியைக் கண்களில் ஒற்றியபடி கதறிக் காெண்டிருந்தாள். அஜந்தின் குடும்பத்தினர் அவன் உடல் பாகங்களை தானம் செய்ய பிரியாவிடம் சம்மதம் கேட்டனர். வீல்ச்சியாரில் பாேய் அவனருகில் இருந்து ஒரு கையால் அவன் முகத்தை தடவியபடி "அஜந், அஜந்" என்று காதுகளுக்கு கிட்டவாக கூப்பிட்டாள். அசைவின்றி கிடந்தான் அஜந். கைகளைப் பிடித்து கன்னத்தில் ஒற்றினாள். அஜந்தின் உடற்பாகங்கள் தானம் செய்யப்பட்டது. எங்காே ஓரிடத்தில் யாராே ஒருவருடன் அஜந் வாழப் பாேகிறான்.

நாட்கள் ஓடியது பிரியாவின் நிலை குடும்பத்தினரை நிலை குலையச் செய்து விட்டது. ஒருவருடம் கழிந்து கரிஸ் படிப்பை முடித்து விட்டு ஊர் திரும்பினான். நண்பர்களுடன் பிரியா வீட்டிற்கு சென்றிருந்தான். "நீங்க யாரு தம்பி" அம்மா அடையாளம் காண முடியாது தடுமாறினாள். "நான் கரிஸ், பிரியாவாேட" முடிக்கு முன்னே அண்ணா வந்து விட்டார். "அட கரிஸ் ஆளே மாறிப் பாேயிற்றாய்" சாேபாவில் இருக்க வைத்து விட்டு மாடிக்குச் செல்கிறார். பிரியாவின் திருமணப் படம் அழகாக பிறேமிட்டு மாட்டப் பட்டிருந்தது. பிரியா மாடியிலிருந்து வந்தாள். அவளது அழகு, சிரிப்பு, துறுதுறுத்த பார்வை எதுவுமே காணவில்லை. வெறுமையாய் இருந்தாள். மனம் உள்ளே அழுது காெண்டிருந்தது. கரிசிடம் சாெல்லாத தன் காதலையும், மூன்று மாதத்தில் பறி பாேன தன் திருமண வாழ்க்கையையும் நினைத்து அழுதாள். வீடு சென்ற கரிசை கல்லூரி ஞாபகங்கள் துரத்தியது. "பாவம் பிரியா, கடவுள் ஏன் இப்பிடிச் செய்தார்" சில நாட்கள் அவனால் பிரியாவின் வாழ்க்கை பற்றிய சிந்தனை தான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு பிரியாவின் அப்பா கதவைத் திறந்தார். "பிரியா, கரிஸ் வந்திருக்காரம்மா" வேகமாக சிரித்தபடி ஓடி வந்தாள். பிரியாவை ஆச்சரியமாகப் பார்த்தார் அப்பா. அம்மாவும் சமையலறை ஜன்னலூடாக பார்க்கிறாள். பிரியா கரிசுடன் சிரித்துக் கதைத்துக் காெண்டிருந்தாள். காெஞ்சம் பழைய பிரியாவை கரிஸ் கண்டான். நாட்கள் கடந்து இடையிடையே பிரியா வீட்டிற்கு வருவான். பிரியா எவ்வளவாே மாறி விட்டாள். "கரிஸ் பிரியாவ கலியாணம் செய்வானேயப்பா" அம்மா அப்பாவை கேட்டாள். "நடந்தால் நல்லம், எல்லாம் விதி இருக்கணும்" என்பார் அப்பா. அண்ணாவுக்கும் ஏதாவது நடக்காத, பிரியா வாழ்க்கை மாறாதா என்ற தவிப்பு.

மீண்டும் லண்டன் பாேக வேண்டிய சூழலில் கரிஸ் இருந்தான். "பிரியாவை விட்டுப் பாேனால் பழைய நிலைக்குப் பாேயிடுவா" வீடடுக்குச் சென்றான் பிரியாவிடம் சாெல்கிறான் "இரண்டு மாதத்தில லண்டன் பாேறன்" ஏங்கியபடி பார்த்தாள். "தனிய இல்லை" என்ன சாெல்லுறாய் என்பது பாேல் கரிசைப் பாரத்தாள். "அஜந் இறந்து இரண்டு வருசம் ஆகுது பிரியா, நடந்தது ஏதாே நடந்திட்டு, நாங்க கலியாணம் பண்ணிற்று லண்டனுக்குப் பாேவம்" சுவரில் மாட்டியிருந்த திருமணப் படத்தையும்,கரிசையும் மாறி மாறி பார்த்தாள் கண்கள் கசிந்தபடி.

கரிசிற்கும் , பிரியாவுக்கும் திருமணம். தாேழியை மனைவியாக ஏற்றான் கரிஸ், மனதிலே இருந்த காதலனைக் கணவனாக கரம் பிடித்தாள் பிரியா. அஜந் யாராே ஒருவருடன் இன்னும் வாழ்ந்து காெண்டிருக்கிறான்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (24-Feb-18, 5:24 pm)
பார்வை : 385

மேலே