மாற்றத்தை தேடி

ஏன் இந்த கதறல்
ஏன் இந்த அழுகை
எல்லா துன்பமும் எதனாலோ ?
வையத்தில் துன்பமே வாழ்வானதே
மெல்லிய சிரிப்பும் இன்று அச்சமூட்டுகிறதே
இன்று ஐயமே வாழ்வாகிப்போனதே
நம்பி நம்பி வாழ்ந்து ஏமாந்துப்போனேனே
எல்லாம் அறியாமையில் தானோ ?
போதும் என்றிருந்தால் வேண்டும் என்று தோன்றவே
வேண்டும் என்றிருந்தால் ஆசையாய் மாறவே
ஆசை பேராசையாகி போகின்றதே
எல்லாம் எதனாலோ ?
நல்லனவே எண்ணினால் தீயதும் எண்ண தோன்றுகிறதே
தீயதை அகற்றினால் நல்லன விலகி ஓடுகிறதே
வாழும் போது வாழ்வை வெறுக்கவே
வாழ்வு முடியும் தருணம் இன்னும் வாழ வழி கேட்கிறேன்
அழுதால் சிரிக்க நினைக்க
சிரித்தால் அழுக நினைக்க
எல்லாம் புதிராகி போனதே
நினைப்பது ஒன்றாகி
நடப்பது வேறாகி
திட்டமும் பாழாகி போகவே
எல்லாம் முடிந்தது என்று எண்ணுகையிலே
புதியதாய் பிறக்கின்றேன்
முயல்கின்றேன்
புது விடியலைத்தேடி
வருவதும் போவதும் எல்லாம் சமம் என்றெண்ணி புதுமையை என் மனதில் புகுத்த போகின்றேன்
மாற்றத்தை தேடி

எழுதியவர் : பிரகதி (25-Feb-18, 11:14 pm)
Tanglish : maatrathai thedi
பார்வை : 726

மேலே