என்றும் உன்னோடு நான்
அமைதியானவளே - எனக்கு
அருமையானவளே...
அடக்கமானவளே - என்னை
அன்பில் அடக்கியவளே...
இன்ப வார்த்தைகளால் - நெஞ்சை
இனிக்கச் செய்தவளே...
உன்னோடு என்னையுமே - என்றும்
உலகமாய் கொண்டவளே...
எந்நாளும் உன்னிடமே - உன்னில்
என்னையும் இணைத்தவளே...
ஐம்புலன் அனைத்திலுமே- என்மேல்
ஐயரமற்றவளே...
ஒருமனமாய் நானும்
உன்னையே ஏற்றுக்கொண்டேன்...
காதலன் நானிருக்க
கவலைகள் உனக்கெதற்கு?
சந்தோசமாயிருக்க - நீ
சலிப்படையாதிருக்க...
இனி ...
என்றும் உன்னோடு நான்..!