கவிஞன்

*கவிஞன்*

கவிஞனின் புத்தகமெங்கும்
கிறுக்கல்கள்! மகிழ்ச்சியும் இகழ்ச்சியும்
நிறைந்த வாழ்க்கை!

வெள்ளை காகிதம்
ஒன்றையும்
விடமாட்டான் அதிலும்
கிறுக்கி விடுவான்
கிறுக்கன் கவிதைகளை..

எழுதுகோல்
இருந்தால் போதும்
போர்வீரன்
என்ற எண்ணம்!
வேட்டையாடி விடுவான்
எழுத்துக்களை..

இவன் எழுதிட ஏங்குகிறதா கவிதைகள் இல்லை
கவிதைகள் வர
காத்திருக்கிறானா
இவன் என்றுமே
புரியாத புதிர்தான்
காகிதத்திற்கும் பேனாவிற்கும்!

நேரம் இருந்தாலே போதும்
அதனை லாபமாக்கி
சரித்திரம் படைக்கும்
முதலீட்டாளன் இவன்
கவிஞன்!
*நா.சதீஷ் குமார்*
https://youtu.be/ZhgxEh550Mk
(Subscribe & Share)

எழுதியவர் : நா.சதீஷ் குமார் (26-Feb-18, 4:46 pm)
சேர்த்தது : Samuel Sathish
Tanglish : kavingan
பார்வை : 330

மேலே