ஒரு துளி
![](https://eluthu.com/images/loading.gif)
முனுக்கென்று ஒரு
துளி கண்ணீர்
கண்ணில் கண்டதும்
சுருக்கென்று தைத்த
முள்ளாய்
இதயத்தில் வலி
முதன் முதலாய்
அநுபவித்த என்
மனதின் கதறல்
போதும் அதை
நிறுத்திவிடு
இல்லையேல்
வெடித்துவிடும்
என் இதயம்
இனி
ஆனந்தக் கண்ணீரை
கூட
அநுமதியேன் என்
இதயம் துடிக்கும்
வரை..,
என்னே வலிமை
அந்த
ஒரு துளிக்கு!
நா.சே..,