இளைஞன்
இளைஞனே!
வெட்டிப் பேச்சுப் பேச
பிறந்தவன் நீ அல்ல...
உன் வெற்றிப் பேச்சை
பிறர் பேச
பிறந்தவன் நீ!
கல்லெறியப்
பிறந்தவன் நீ அல்ல...
கல்வெட்டில்
உன் பெயர்பதிக்கப்
பிறந்தவன் நீ!
பிறருக்காக கைத்தட்டப்
பிறந்தவன் நீ அல்ல...
உனக்காக பிறர் கைத்தட்டலைக் கேட்கப்
பிறந்தவன் நீ!
கன்னியின் கண்மயக்கப்
பிறந்தவன் நீ அல்ல...
கன்னியின் கண்ணீர்த் துடைக்கப்
பிறந்தவன் நீ!
கால்(லை) பின்நோக்கி வைக்கப்
பிறந்தவன் நீ அல்ல...
காளையை அடக்கப்
பிறந்தவன் நீ!
போர்க்களத்தைக் கண்டு அஞ்சியோடப்
பிறந்தவன் நீ அல்ல...
அஞ்சாமல் களத்தில் போராடப்
பிறந்தவன் நீ!
உன் எதிர்காலம் என்னாகுமோ! என்ற எண்ணமா?
இன் நாட்டின் எதிர்காலமே
நீ தானடா!
வீழ்ந்து கொண்டிருக்கும் நம்நாட்டை
வல்லரசாக மாற்றுபவனும் நீயே!
வேகத்தோடு விவேகம் கொள்
இந்நாட்டின் மன்னரும் நீயே!