விரைந்து வா இல்லையேல் விருந்துண்ண வா

குருதிகளின் ஓட்டம் இதயத்தில் சீராய் இல்லை
குழப்பங்கள் பதிந்தால் நான் நானாயில்லை


ரத்தங்களின் வெப்பத்தில் நீ தந்த
பனிக்கட்டி முத்தங்களும் கரைந்துருகுகின்றன....

நீ மௌனமான இந்த நிமிடங்களில் .....
நாம் பேசிய கதைகளெல்லாம் காதோரும்
கருந்தேளாய் கொட்டி கொண்டிருக்கிறது

நினைவுகளில் கிடங்குகளில் தீ பற்றி எரிகிறது
அணைக்க கண்ணீர் போதாது மழையை யாசிக்கிறது.......


தீர்ந்து போகாத வெள்ளை தாள் சிந்தனை
உனக்காய் எழுதும் ஒரு மன்னிப்பு கடிதத்திற்காய்
கசக்கி தூக்கி எறிந்த காகிதங்கள் எண்ணிக்கை அதிகரித்து
கடைசி அட்டை வரை கணம் பார்த்து விட்டது
இருந்தும் மன்னிப்பு கடிதம் முடிந்தபாடில்லை...


தேகத்தில் நான் விடும் மூச்சிலும் கோளாறு ஏற்பட்டுவிட்டது
நாசிகள் கார்பன்டை ஆக்ஸைடை உள் எடுத்து கொண்டு
ஆக்சிஜனை வெளியே விடுகிறது
உன் மாற்றத்தால் விஷமாகி போனது சுவாசமும்...


காயம் கொண்ட இதயமும் மேலும் இயங்க
404 தடை உத்தரவை போட்டுள்ளது நீ வரும் வரையில்..........

உன் அன்பு செய்த காயங்களுக்கெல்லாம்
உன் அன்பால் மட்டுமே மருத்துவம் செய்ய முடியும்
விரைந்து வா இல்லையெனில் மூன்று தினங்கள் கழித்து
விருந்து உண்ணவா என் ஈமச் சடங்கில்........

எழுதியவர் : ராஜேஷ் (28-Feb-18, 11:06 pm)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 348

மேலே