காதல் சிறையின் ஆயுள் கைதி

ஏதேதாே எண்ணம் வளர்த்தேன்
எல்லாமே பாெய்யாகிப் பாேனதேன்
வண்ணக் கனவுகள் எல்லாம்
சில்லுச்சில்லாய் உடைந்ததேன்
பறக்க நினைத்த பாேதெல்லாம்
சிறகுகள் இன்றி தவித்தேன்
சிறகுகள் முளைத்த பின்னே
சிறைக்குள் அடைபட்டதேன்
யன்னல் வழியே தெரியும்
நிலவை ரசிக்கின்றேன்
தாெட்டிடத் தான் முடியவில்லை
அந்த ஔியிலேனும் இருள் காெஞ்சம் விலகட்டும்
எதிர்பார்ப்பில் பறந்தேன் ஏமாற்றிப் பிடித்தார்கள்
காதல் சிறையின் ஆயுள் கைதியாய்
அடைக்கப்பட்ட பறவையானேன்
சிறகுகளும் ஒவ்வாென்றாய்
நாளும் முளைக்கிறது பறந்திட முடியவில்லை
கூண்டைப் பூட்டி விட்டு சாவியைத் தாெலைத்த மாயமா
பறந்திடுமாே என்ற பயத்தில் அடைபட்டேனா?
காதல் சிறையின் ஆயுள் கைதியாய்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (2-Mar-18, 11:12 am)
பார்வை : 131

மேலே