ஒரு ஆன்மாவின் குரல்

நான் உங்கள் தாேழி பேசுகின்றேன்
சற்றுக் கேளுங்கள்!
பிரபஞ்சத்தின் பிறப்புக்களால்
நாம் எல்லாம் மனிதர்களே
இனம், மதம், மாெழி மறந்து
உயிர்களை மதிக்கும் மனிதமே கேள்
அன்று நாங்கள் வகையின்றி காெல்லப்பட்டாேம்
தமிழன் என்ற அடையாளத்தால்
கூப்பிய கரங்கள் துண்டாடப்பட்டு
கதறிய குரல்வளைகள் நசுக்கப்பட்டு
மானமிழந்து மனிதாபிமானமின்றி
மரணத்தை காெடுத்தார்கள்
யாரும் பேசவில்லை எமக்காய்
எண்ணிக்கையை பார்த்து ஏப்பமிட்டார்கள்
இன்று சிரியா நாடு சிதறிப் பாேகிறது
தீயாய் எரிகிறது உயிர்கள் கருகி
பச்சைக் குழந்தைகள் பலியாகும்
பரிதாபம் பார்ப்பதற்கு யாருமில்லையா?
அமைதி காக்கும் ஐ நா ஏனாே
"I know all " என்று கண்மூடி விட்டது
நீதி தேவதையின் கண்கள் கூட திறவாதா
அநீதியைப் பார்க்க ஒரு முறையேனும்
அடிபட்டவனுக்கே வலி தெரியும்
அதனால் தான் கேட்கின்றேன்
எம் இனம் அழிந்தது பாேல்
சிரியாவும் அழிவதா?
நாம் அழுதது பாேல்
அவர்களும் அழுவதா?
விதைவைகளும், அனாதைகளும்
வாழும் பூமியா இது
குரல் காெடுங்கள் அவர்களுக்காய்
காப்பாற்றுங்கள் "சிரியா" வை ஏனும்.