தமிழனே உணர்
தமிழா!
நீ யார்?
உணர் அதை!
பூலோகம் தந்த
முதல் வாரிசு நீ!
மனித இனத்தை உருவாக்கிய
விதை நீ!
நாகரிகமான முதல் குடி
உன் குடி!
விருந்தில் மருந்தில்
இசையில் வீரத்தில்
வென்றவன் நீ!
பேரும் புகழும் பெற்ற
முதல்வன் நீ!
உன்னை யாரென்று நினை
புரியும் பின்னால்!
தேவை
தமிழர்களின் ஒற்றுமை என!
பழந்தமிழகத்தை,
பழங்கதை என
பழஞ்சோறாக விலக்காதே!
புதியதுக்கே மரியாதை
பழையது தான் தமிழா!
பழையது தான்!
உன்னால் என்னால்
ஆகுவது இல்லையென
ஒதுங்காதே தமிழா!
ஒதுங்காதே!
தம்மில் நம்மில்
போற்றினால் மட்டுமே
மறுபடியும் முளைவோம் தமிழா!
மறுபடியும் முளைவோம்!
உலகை வெல்ல -ஒத்த
கருத்துடன் நிற்போம் தமிழா!
கருத்துடன் நிற்போம்!
'செந்தமிழ் ஒன்றே
நல்லொற்றுமை சேர்க்கும்'
என்றார் புரட்சிக்கவிஞர்.
அதனால்,
தாயை மதி!
மாறும் விதி!
தமிழை மதிப்போம்!
மீட்டுருவாக்கம் செய்வோம்!
பழந்தமிழர் தந்த தமிழ்நாட்டை
மீண்டும் உருவாக்குவோம்!
வாழ்க தமிழ்!
வாழ்க தமிழன்!
வளர்க தமிழ்நாடு!