ஏனடி துண்டித்து விட்டாய்
ஆதார் கார்டாய்............
எனக்கு முகவரி தந்தவளே !
சுமார்ட் கார்டாய் ..........
எனக்கு சோறு போட்டவளே!
போஸ்ட் கார்டாய் ..........
ஊர் பயணம் போன்வளே !
ஏ டிஎம் கார்டாய் .............
மணி பர்ஸுக்குள் இருந்தவளே!
உழவர் கார்டாய் .............
ஒன்றுக்கும் உதவாமல் போனவளே!
சிம் கார்டாய் ..............
வந்து செய்தி சொன்னவளே !
எத்தனையோ கார்டாய் ...நீ
வாழ்க்கையில் வந்து போனாலும்
ஏர்செல் கார்டாய் ......திடிரென்று
ஏனடி ?தொடர்பை ...
துண்டித்து விட்டாய் ?
இரா .மாயா