நீதிபதி சிந்திய மைத்துளி
பட்டப்பகலில்
எழுதிய கவிதை
பட்டப்பகலில் மரித்தது.
மரித்த அக்கவிதையை
ஊர்க்குருவிகள்
பட்டப்பகலில் உண்டன.
கவிதை உண்ட
குருவிகள் பறந்தன
பட்டப்பகலில்...
பறந்த குருவிகள்
முட்டையிட்டன
பட்டப்பகலில்...
பொறிந்தன முட்டைகள்
பட்டப்பகலில்...
பகல் குஞ்சுகள்
பறந்தன வெளியில்
பட்டப்பகலில்...அதனை
பட்டப்பகலில்பார்த்தவன்
எழுதினான் கவிதையொன்று
பட்டப்பகலில்...
பட்டப்பகலில்
எழுதிய கவிதை
பட்டப்பகலில் மரித்தது.