வசமாகிவிடுங்கள் தேவதைகளின் வசம்

பெண்கள் இயல்பிலே அதீத அழகானவர்கள்
பெண்கள் இருந்தும் அழகின் பின் அலைபவர்கள் கூட

பெண்கள் மிகமிக புனிதமானவர்கள்
சில நேரம் பெண்கள் புதிரும் கூட

பெண்கள் சாமரம் வீசும் தேவதைகள்
பெண்கள் சண்டை கிளம்பும் சகுனிகளும் கூட

பெண்கள் தாய்மையின் ஒப்பில்லா அழகு
பெண்கள் மாமியாரானால் அபத்தத்தின் ஆரம்பம்

பெண் மனைவியாக உன் தோளில் சாயும் தேவதை
பெண் மதம் பிடித்த யானையாக மாறுவதும் உண்டு

பெண் வாழ்நாள் தோழியாக ஒரு கணவனின் கைகோர்க்கிறாள்
பெண் சிலநேரம் வாழ்நாள் வேலைக்காரியாக வாழ்ந்து முடிக்கிறாள்

பெண் அவ்வப்போது ஒரு குழந்தையென சிணுங்குகிறாள்
பெண் சில நேரம் கோபத்தில் முகம் சிவக்கிறாள்

பெண் சகோதரியாக என்ன என்று உன் தலை வருடிகிறாள்
பெண் என்னடா போடா என்று உன்னிடம் வம்பும் செய்கிறாள்

பெண் சற்றுநேரம்கூட வாய் மூடாமல் பேசிக்கொண்டே இருக்கிறாள்
பெண் சிலநேரம் பேச்சற்ற விழி மூலம் ஆழமாக பார்க்கிறாள்

பெண் தான் அறியாத சலனங்களை அவனுக்குள் விதைத்து செல்கிறாள்
பெண் தான் அறிந்ததும் அந்த சபலத்தை அறவே அறுத்து செல்கிறாள்

பெண் புற வளைவுகள் அசைவு பார்க்க இருக்கிறது கூட்டம்
பெண் அகம் பேசும் கானம் கேட்க ஆளே இல்லை சில நேரம்

பெண்ணின் ஆடைகள் தாண்டி ஊடுருவும் கண்கள் அவளை சுடுகின்றன
பெண் பெருமூச்சு தாண்டி தன் விழி நெருப்பில் அவனை எரித்து செல்கிறாள்

பெண் பறவையென திக்கற்ற திசை பறக்க ஆசைப்படுகிறாள்
பெண் மனமறியாமல் அழகிய கூண்டை பரிசளிக்கிறான் அவன்

பெண் அன்பின் கூண்டுக்குள் அடைபட்டு தன்னை அடக்கிக்கொள்கிறாள்
பெண் அணுவின் ஆசைகள் புரியாத அற்பங்களால் அவள் சிற்பமாகிறாள்

பெண்ணால்ஒ வ்வொரு வீடும் சொர்க்கமாகிறது
பெண்ணால் ஒவ்வொரு வீடும் பாடசாலையாகிறது
பெண்ணால் ஒவ்வொரு வீடும் கானமாகிறது
தேவதை அவள் தவம் கொண்ட தேவதை அவள் .
தேவதை அவள் தன்னை மறந்த தேவதை அவள்

பெண் வாழும் உலகம் வெகு அழகானது
அது அவளால் தான் அத்தனை அழகாகிறது

பெண் வாழ நினைக்கும் உலகம்
மிகமிக அழகானது
அது உன்னாலே உன்னாலே
அவளை சுற்றி உள்ள உலகாலும்
அவள் கரம்பற்றிய உயிர் கணவனான
உன் புரிதலால் மட்டுமே
அப்படி அழகாக முடியும் அறிவாயா ?

பெண்கள் தினம் மகளிர் தினம்
பூக்களை பரிமாறிக்கொள்வதைவிட
புரிதலை பரிமாறிக்கொள்ளுங்கள்
வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதைவிட
வசமாகிவிடுங்கள் தேவதைகளின் வசம்
தேவதைகள் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (8-Mar-18, 6:33 pm)
பார்வை : 4843

மேலே