திருமதி மண்ணாங்கட்டி கவிக்கு பணி ஓய்வு வாழ்த்துக்கவி

அங்கன்வாடியின்
அங்கம் வாடாமல்
பணிசெய்தாய்

அழுத குழந்தைகள்
ஓடாமல் பணி செய்தாய்

அனைத்துக் குழந்தைகளையும்
அணைத்துத் தாயாக விருந்து கொடுத்தாய்
அதனால் தாயக விருதுபெற்றாய்

நீ கண்மை வைத்தால்கூட
பிறருக்கு நன்மை உண்டா என்று யோசிப்பவள்

உன் பெண்மையை
மேன்மை என்றே வாசித்தவள்
அனைவரின் உள்ளத்திலும் வசித்தவள்
அன்பெனும் வாடகை மட்டும் யாசித்தவள்

உன் பெயர்தான் மண்ணாங்கட்டி
உள்ளமோ பொன்னாங்கட்டி

அண்ணாவின் நாவில் விளையாடிய
தமிழ்தான் உன் நாவிலும்

நீ பாட்டி ஆகிவிட்டாலும்
எங்கள் செவிகளில்
இன்னும் இனிக்கின்றது
உன் பா டி

நீ நகையின் சுவையைவிட
நகைச்சுவையை விரும்புபவர்

நீ அகில இந்திய எறும்புகள்
சங்கத்தின் ஒரே தலைவி சுறுசுறுப்பில்

நீ இந்தியாவில் பிறந்த விந்தியா
இந்த வயதிலும் ஒட்டொடித்
தமிழ்த் தொண்டாற்றும்
உங்களைக்காணும்போது
இருக்கின்றது எங்களுக்கு விந்தையா

உன் பெயரோ மணி
நீ வேலையில் பார்த்ததில்லை மணி
உன் தமிழுக்கு விரைவில் கிட்டும் கலைமாமணி
பூமீது பனிபோல் மென்மையாய்ச் செய்தாய் உன் பணி
பெண்ணாய்ப் பிறந்த கனி
மண்ணாய்ப் பிறந்த மணி
இல்வாழ்வில் ஈடுபட்ட முனி
நன்மையே தரட்டும் உனக்குச் சனி
உன்போல் குழந்தைகளை யார் காப்பார் இனி

வாழ்க உம் பணி

எழுதியவர் : குமார் (10-Mar-18, 7:17 am)
பார்வை : 148

மேலே