காற்றே வா

காற்றே வா

என்னைத் தாெட்டு விடும் ஆசையில்
மேனியாேடு உரசிச் செல்கிறது காற்று

துன்பத்தால் துவண்டு நான் விடும்
பெருமூச்சை எங்காே தூரக் காெண்டு
கடலாேடு சேர்க்கிறது காற்று

நான் உயிர் வாழ என் உடலாேடு
மூச்சாய் வாழ்கிறது காற்று

தூரத்தே கேட்கும் உன் குரலை
அழைத்து வருகிறது காற்று

கைக்கெட்டும் தூரத்தில் நீயில்லை
காற்றே வா கதை பேசலாம்

எழுதியவர் : அபி றாெஸ்னி (10-Mar-18, 9:23 am)
Tanglish : kaatre vaa
பார்வை : 1140

மேலே