இயற்கை

இயற்கை






நாம் வாழ்வதும் அதற்காகத் தான்
நம்மை வாழவைப்பதும் அது தான்
ஆனால்
அது எனக்கு வேண்டாம்...

துளி இல்லையேல் உயிர்விட்டு போகும்
உயிர் இல்லையேல் உன்னை விட்டு வாடும்
ஆனால்
அது எனக்கு வேண்டாம்...

பிறப்பதும் உன்னில் இறப்பதும் உன்னில்
நிலையாய் வாழ்வதும் உன்னில் தான்
ஆனால்
அது எனக்கு வேண்டாம்...

நொடி பொழுது பிரியாது உன்னை விட்டு
பிரிந்த நொடி பொழுதில் செவ்வாய் உயிர் விட்டு விட்டு
ஆனால்
அது எனக்கு வேண்டாம்....

Write
by
T.Suresh..


1. உணவு வேண்டும் ஆனால்
விவசாயம் வேண்டாம்..

2.நீர் வேண்டும் ஆனால்
மழை வேண்டாம்...

3.நிலம் வேண்டும் ஆனால்
மண் வேண்டாம்...

4.காற்று வேண்டும் ஆனால்
மரம் வேண்டாம்...

இயற்கை வேண்டும் ஆனால் பாதுகாக்க வேண்டாம்

_ மனிதன்

எழுதியவர் : சுரேஷ் (10-Mar-18, 10:23 am)
Tanglish : iyarkai
பார்வை : 1881

மேலே