அடையாளம்
அறியாமையிலும், ஆசையிலும்
கிடந்தது உழல்கிறாய்.
பன்றிகளோடும், நாய்களோடும்
பக்கத்தில் சாக்கடையோடும்.
சொந்த இடம் இல்லை என்பதற்காய்
இந்த இடம் போதுமெனத்
திருப்தி யுற்றாய்.
உன் சாமர்த்தியமும் சரியில்லை
உன் செலவும் சரியில்லை
நீயும் சரியில்லை
உன் வாழ்வும் சரியில்லை.
உன்னை ஏமாற்றுபவர்களை
அடையாளம் காண முடியவில்லை.
உன் அடையாளமே
உனக்குத் தெரியவில்லையே?
பிறகெப்படி?