அருகில் ஒரு யாழ்

தொலைவில் ஒரு வானவில்
ஏழு வண்ண எழில் காட்டியது
அருகில் ஒரு யாழ்
ஏழு சுரங்களில் இசை மீட்டியது
ஏதோ குறை தெரிகிறதே
என்று யோசித்தேன்
அருகில் அவள் வந்து அமர்ந்தாள் பார்த்தாள்
வானமும் பூமியும் யாழும்
வசந்த ராகம் பாடியது !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-18, 10:27 am)
Tanglish : ARUGIL oru yaal
பார்வை : 213

மேலே