மௌனம்

உன் மௌனமே யென்னை யீர்த்ததடி
இன்று உன் மௌனமே யென்னை கொல்லுதடி!

உலகத்தின் தொன்மையான மொழி
கன்னித் தமிழென யெண்ணியிருந்தேன்
அது பொய்த்த தடி!
மௌனமே யென்று - யுன்னைக் கண்டதும்!

மௌனமென்னும் ஆயுத மேந்தி நிற்பவளே
அதை முறையாக பயன்படுத்து - இல்லையேல்
நீ தொடுக்கும் பானம் யென்
மனதை சல்லடையாக துளைத்து
கூறுக ளாக்கி வீசி விடும்!

பெண்ணே யுரைப்பா யாகநின்
மௌனத்தை வீழ்த்து மாயுத மென்னவென்று!

கண்ணே இயற்கையும் நின்னிடம்
போர் தொடுக்கும் தன்னைவிட
யழகாய் காட்சியாகிறாய் யென்று!
அதனால் தான் கேட்கிறேன் பெண்ணே
இதை வீழ்த்து மாயுத மென்னவென்று!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (11-Mar-18, 1:14 pm)
பார்வை : 2730

மேலே