சுக்கில சேற்றில் மதயானை
புகை தாழும் இரவில்
நனையாத துயிலூடே
உடலெங்கும் விரவி
மூண்டெழும் கனல்.
உதிரத்தில் நீர்த்த
உன்மத்த ஆலாபனை.
துணையற்ற கைக்கிளை
நீங்கிய சுழிப்பில்
உயிர் கவ்வும் வலி.
வெயில் உலர்த்திய பூவில்
கொட்டித் தீர்ந்தன
காம மகரந்தங்கள்.
பொங்கும் நுரையெங்கும்
மரணத்திருவிழா...
எறும்பு அகலும் பாதையில்
கிளர்ந்து பெய்த சரமழை.
விழி உகுக்கும் நீரில்
நொய்ந்த உன் தனிமை.
இரவைப் புணர்ந்த
நெடிய தாவரமாய் நான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
