பெண் - அருவி
#அருவி படத்திற்கு வாழ்த்து கவிதை
பீற்றுக்குழலில் ஏவிய தோட்டாக்கள்!
அருவி..
நீ கடந்து வந்த பாதை
மிக கடினம்..
கணத்திடும் கற்கள்,
நெறியற்ற முகடுகள்,
பாலைவன சோலைகள்,
பயங்கர பள்ளத்தாக்குகள்,
கடைசியில்..
நீ கலந்திட்ட
கடல் குவளையில்
மிஞ்சியது உப்பு மட்டுமே!
நீ வீசிய
சாரல் காற்றில்
சிலிர்த்து எழுந்த
பூக்கள் ஏராளம்..
ஏனோ!
உன்னை,
முள் வேலிகளும்
பதம் பார்த்து விட்டது
தாராளமாய்!
உன் கற்பித்தலில்
வாழ்வின் உத்தமம்
அறிந்தோம்,
உயிரின் உன்னதம்
புரிந்தோம்,
இனியாவது
வாழ பழகி
பக்குவப் படுகிறோம்!
அருவியே..
உன் நீர் விருத்தியை
எங்கள் கண்ணீர்
கொண்டு வளம்
சேர்த்துள்ளோம்..
மீண்டும் ஊற்றாய்
பெருகிடு..
உன்னை அணைத்து
காத்திடுவோம்!
உன் மிச்சங்களாய்
நீர்த் தேக்கங்கள்,
இன்று விருதுகளால்
நிரம்பி கிடக்கிறது..
உன் அடுத்த
பிரவேசத்திற்காக
காத்திருக்கிறோம்!
** பீற்றுக்குழலில் - syringe