இளந்தளிர்கள் இரண்டு

பிரபா பிரபா
தோட்டத்தில் ஊஞ்சல் விளையாடுகிறாள்...
நீ இங்க தான் இருக்கியா.
இதோ வரேன் என்று மெதுவாக அருகில் சென்று பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.
அவரின் தொடுதலும்
அவரின் வாசமும் அவளுக்கு தெரியாதா!
கைகளை மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
அருகில் அமர்ந்து
இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன் பிரபா ...
செம மாமா...சூப்பர்
நானும் ரொம்ப சந்தோசமா இருக்கன்.
வாவ் சூப்பர் டி .
என்றவாறே இறுக்கி அணைத்து முத்தமிட்டார்.
அவர் விரல்களோடு என் விரல்களை கோர்த்துக் கொண்டேன்.
இன்று என்ன நடந்தது தெரியுமா!
சொல்லு மாமா...
ரெண்டு மரம் ஒன்னா கட்டி பிடித்தபடி இருக்கும்.
பாக்கவே அப்படி இருக்கும்.
அவ்ளோ அழகு...
ம்ம்...
அந்த மரம் ரெண்டும்
ஒரு இடியில ஒன்னாவே
பட்டு போயிடுச்சு.
தினமும் அந்த மரங்களுக்கு தண்ணீ ஊத்துவன்.
நிறைய பேர் அது பட்டு போயிடுச்சுங்க .திருப்பியும் உயிர் வராது என்றாங்க.
ஆனா நான் தினமும் தண்ணீ ஊத்தறத விடல.
இன்னைக்கு போய் தண்ணீ ஊத்தனனா .
ஒரு குட்டி பாப்பா
அங்கிள் இங்க பாருங்க என்று காண்பித்தாள்.
இரண்டு மரங்களின் அடியிலும்
தளிர்கள் ஒன்றாக துளிர் விட்டிருந்தது.
அந்த மகிழ்ச்சியை வார்த்தையில் விவரிக்கவே முடியாது பிரபா...
கட்டியணைத்து முத்தமிட்டு
என்னாலும் இதற்கு வார்த்தையில் விடையளிக்க முடியாது மாமா...
உணர்வுகளை வார்த்தைகள் விவரிக்காதே...மாமா...
இது போல் தான் அந்த குட்டி பாப்பாவும் என்னை அணைத்து
அங்கிள் நீங்க தினமும் தண்ணீ ஊத்தும் போது ஒரு வித நகைப்போடே பார்ப்பேன்.
இன்று சன்னல் வழியாக பார்க்கும் பொழுது துளிர் விட்டிருப்பதை கண்டு சந்தோசம்...
காலையிலேயே நான் நீர் ஊற்றி விட்டேன் மாமா...
இனி தினமும் நானும் தண்ணீர் ஊற்றுவேன் மாமா என்று கூறி
ஹைபை அடித்துக் கொண்டோம்.
அந்த இளம் தளிரின் மனதிலும் எண்ணம் துளிர் விட்டிருப்பதை கண்டு ஒரே மகிழ்ச்சி டி...
வாய்ப்பே இல்ல மாமா...
என்று வாரி அணைத்துக் கொண்டாள்.
முகம் முழுவதும் முத்தமிட்டாள்...
உன் மகிழ்ச்சியை சொல்லு அம்மு...
இப்படி உங்கள் அருகில் இருப்பது
இந்த உலகில் மிகப் பெரிய சந்தோசம் மாமா...
அதுமட்டுமில்லாமல்
நீங்கள் சொன்ன அந்த மரங்களுக்கு நானும் தினமும் நீர் ஊற்றுவேன் மாமா...
அதன் கீழே பார்த்தீர்களா மாமா
பசும் புற்கள் மண்ணை போர்த்தியும்...
பறிக்காத பூக்கள் நம்மை பார்த்து புன்னகைப்பதையும்...
அருமை பிரபா ...
பார்த்தேன் ...மகிழ்ந்தேன் துள்ளி குதித்தேன் பிரபா...
உங்களிடம் துளிர்த்தவுடன் சொல்லி உங்களை அங்கு அழைத்துச் செல்லலாம் என்று இருந்தேங்க...
எப்படி பிரபா நான் நெனச்சதையே
நீயும் நெனச்சிருக்க...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.....
அதான் நாம் இருவரும் இணையர்...
நல்ல புரிதல் உள்ள கணவன் மனைவி மாமா...
ஆமாம் டி...
நாம்..
நாம்..
ஹா ஹா..
ஹா ஹா..
போகலாம்..
போகலாம்..
இருவரும் கைக்கோர்த்து
இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் நேசித்து காதலித்து துள்ளி குதித்து பறந்து சென்று
புன்னகையோடு மரங்களை கட்டி
அணைத்துக் கொண்டனர்...
முத்தங்களை பதித்துக் கொண்டிருந்தனர்...
இருவரின் கைகளும் இப்பொழுதும் எப்பொழுதும் கைகளைக் கோர்த்துக் கொண்டு தான் இருக்கிறது...
அந்த மரங்களின் மடியில் இருவரும் இணைந்து அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர்.....
மீண்டும் ஒரு முறை மணம் புரிந்து கொள்ளலாம் என கண்ணாலே பேசிக் கொண்டோம்...
அதற்கு அவள் சம்மதம் தெரிவித்து என் விரலை கோர்த்துக் கொண்டாள்...
நானும் அவள் கையை பிடித்து என் நெஞ்சோடு பற்றிக் கொள்ள...
அவள் என் தலையை
அவளின் இதயத்தில் இறுக்கி வைத்தாள்...
இதயம் துடிப்பது கேட்கிறதா...
அது உன் பெயரில் துடிக்கிறதா..
என் அன்பே...
என் உயிரே...
என்று சொன்னது அவ்விறுக்கம்...
இந்த நொடியே இறந்தா நல்லா இருக்கும் பிரபா...என்று நான் கூறும் நொடி ..
அவள் இதயம் ஒரு நொடி நின்று துடித்ததை உணர்ந்தேன்...
ஆம் மாமா...
ஆனால் உனக்கு முன் நான் தான் இறப்பேனடி...
நினைப்புத் தான்...
உனக்கு ஒரு நிமிடம் முன்பே நான் இறந்திருப்பேன் மாமா...என சொல்லியபடி அவரை நோக்கியவாறு
கரத்தை பிடித்துக் கொண்டு மடியில் படுத்துக் கொண்டாள்...
இந்த ஒன்றில் மட்டும் ஏனடி என் பேச்சை கேக்க மாட்டேங்குற.
நான் இறந்த உடன் நீயும் என்னோடு வந்துவிடுடி...
நான் முதலில் இறக்கிறேன் டி...
பிரபா பிரபா..
நெஞ்சு வலிக்குது பிரபா...
நெஞ்சு வலியில் அவர் துடிக்கிறார்.
அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லை...
இந்நேரம் அவள் எப்படி பதறியிருப்பாள் என்ன ஆனது என
அவள் இதயத்தில் காதை வைத்து கேட்க...
அவள்இதயம் துடிக்கவில்லை..
என் பத்தினி
சொன்னது போலவே எனக்கு முன்பே இறந்து விட்டாயா டி...
அதே மாத்திரம் அவன் உயிரும்
அவள் மார்பில் மரித்தது...
எங்கள் உயிரும் உடலும் உதிரமும்
அவ்விரண்டு மரங்களின்
உயிராகவும்
உரமாகவும்
நீராகவும் ஆனது.....
இளந் தளிராய்
புது துளிராய்
சிறு துளியாய்
சின்ன இலைகளாய்
வண்ண பூக்களாய்...
தென்றல் காற்றாய்...
நானும் அவளும் ...
எப்பொழுதும் எங்களின் வசந்த காலங்கள்...
உன் மனைவி
~ பிரபாவதி வீரமுத்து