எல்லாம் இங்கு சாயம்
போகும் பயணம்-அது
தூரமில்லை
வாழும் வாழ்வு -இது
உண்மையில்லை
இறைவா உன் படைப்பில்
கண்ணில் கண்ணீர்
இல்லையனில்
புவியில் மனிதரில்லை..
ஒவ்வொரு அலைக்கு பின்னும்
கரை தொட
மற்றொரு அலை உண்டு ...
நீ படைத்த படைப்பில்
எத்தனை எத்தனையோ
துயருண்டு ..
அத்தனை துயர்க்கும்
ஓர் முடிவுண்டு
அத்தனை முடிவுக்கும்
ஓர் துடக்கமுண்டு..
எல்லாம் இங்கு
சாயம்
வாழ்வு என்பதே
வெறும் மாயம்
இதில் கரையும் பணம் என்ன !!
பகட்டு காட்டும் பதவி என்ன !!
தலை கணம் கூட்டும் புகழ் என்ன !!
புலம் தொடும் காதல் என்ன !!
இனம் பெருக்கும் காமம் என்ன..!!
எல்லாம் பொய்த்து போகும்
இதை தெரிந்த மனதில்
மட்டுமே உண்மை விளங்கும் ..
விளக்கம் இல்லா வாழ்வில்
விளக்கம் தேடி அலையும்
இரண்டு கால் விலங்குகள் நாம் ,
இதை விளங்கி கொண்டால்
பற்றேது ....பாசமேது..
நட்பேது ..உறவெது .??!!
எல்லாம் இங்கு வெறும்
காட்சித் தோற்றம்
அடுத்த நொடி
கொடுக்கும் மறுமங்களே
வாழ்வின் மாற்றம்
என்றும் ...என்றென்றும் ..
ஜீவன்