கவிதைக்காரன்

என்னுடன்
எப்போதுமே
ஒரு நூல்
இருந்துக்கொண்டே
இருக்கும்
அது அவளின் நினைவுகள்

எழுதி எழுதி
பழக்கமாகிவிட்டது
உறக்கத்திலும் எழுதுகிறேன்
கனவின் வாயிலாக

என்ன நாகரீகம் இது
அவளின் காதுகளில்
வளையல்களை
கண்டேன்

எழுதுங்கள்
என் சமாதியில்
இவன் கவிதைக்காரன் என்று

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (16-Mar-18, 8:29 am)
Tanglish : kavithaikkaran
பார்வை : 630

மேலே