மாட மாளிகை
நிலத்தின் நிறத்தில் ஒரு
மாளிகையை கண்டேன்...
மாளிகைக்குள் ஓர்
இராஜ்ஜியமும் கண்டேன்...
பல லட்சம் பணியாட்கள்
பணி செய்யக் கண்டேன்...
படைவீரர் போர்க்களத்தில்
போர் செய்யக் கண்டேன்...
பிழையாட்சி செய்யாத
மன்னரைக் கண்டேன்...
பல பிள்ளை
ஈன்றெடுக்கும்
இராணியைக் கண்டேன்...
கண்டு கண்டு
சிலிர்த்தேன்...
கண்ணில்லா கரையான்கள்
இராஜ்ஜியத்தை...
சின்னஞ்சிறு கரையானே!
உன் சிந்தனைதான்
உன் சாதனையோ!
விஞ்ஞானியும்
வியந்து போவானே
உன் வியத்தகு
விந்தையை பார்த்து...