வாழ்க்கை நடைமுறை
அன்று நான் நடந்து கொண்டிருந்தேன்.
என் வீட்டில் இருந்து என் நண்பன் வீட்டிற்கு தெருவில் யாருமே இல்லை
என்னடா இது தெருவில் யாருமே இல்லையே என நினைத்து பாதி தெருவையே கடந்து விட்டேன்.அந்த நேரம் அங்கு ஒரு வியாபாரி தன் பொருளை கூவி விற்று கொண்டு வந்தான்.பின் அங்கு ஒரு குரல் கேட்டது நில்லபா என்று.அவனும் நின்றான் நானும் நின்றேன் ஏனென்றால் அவன் விற்றது எனக்கு பிடித்த சமோசா! ஒரு ருபாய்க்கு இரண்டு.அந்த அம்மா பேரம்
பேசி முன்றாம் வாங்கியது.நானும் வாங்கினேன்.அவனது பாதி கூடை காலியாக அவனை கூர்ந்த அனைவரும் கலைத்தனர்.நம்ப ஊர்ல சின்ன சின்ன
வியாபாரிகள் இருந்தாங்க! சின்ன சின்னஆசைகள் நிறைவேற்றி மனச்
நிறைவு செய்வோம்.ஆனா இப்போ
ஒரு பொருள் வாங்க கடைகள் போகனும்.விலையை பார்த்தா ஏக்கத்தோடு வாங்காமே வந்துரோம்.வாழ்க்கை வசதிகள் ஏற்ப இந்த உலகமும் மாறுது புரிந்து நடந்துகோக....!!!