காதலிக்க வேண்டாம்

நீ என்னைக்
காதலிக்க வேண்டாம்!
ஆம் பெண்ணே!
என்னைக் காதலிக்க
வேண்டாம்!

என்னைப் போல்
தனிமைப் பருக வேண்டாம்!
தவிப்புகளில்
தத்தளிக்க வேண்டாம்!

உயிரைத்
தொலைக்க வேண்டாம்!
உணர்வுகளைப்
புதைக்க வேண்டாம்!

காதலே உயிரென
நினைக்க வேண்டாம்!
கண்ணீரால்
கரைய வேண்டாம்!

புலன்களை வருத்திக்
கொள்ள வேண்டாம்!
புதிது புதிதாய் எண்ணங்களை
வளர்த்துக்கொள்ள வேண்டாம்!

என் நினைவுகளில்
நீ தொலைய வேண்டாம்!
முழுதாய் என்னைப் போல்
நீயும் மாற வேண்டாம்!

உன்னிடம் கேட்பதெல்லாம்
நீ என்னைக் காதலிக்க வேண்டாம்!
உன்னை நான் காதலிப்பதை
தடுக்காமல் இரு!
அதுவே போதும்!!!!!!

எழுதியவர் : யாழ்வேந்தன் (19-Mar-18, 6:48 pm)
Tanglish : kaadhalikka ventaam
பார்வை : 403

மேலே