இதுதானா,,, இதற்குத்தானா

" இதுதானா,,, இதற்குத்தானா?"

தேளாய் கொட்டி போய்விட்டாய்..
தாளாமல் துடிக்குது
பெண்மனது.....

மறந்து போன உன் அன்பினால்,
இறந்தே போனது
என்மனது....

பட்டென்று உதறி புறக்கணித்தாய்..
கட்டுக்குள் அடங்காமல்
கண்ணீர் வழியுது....

விழிகளை படரவிட்ட நொடியில்
விலகிய உன் பார்வை,
காதலுக்கு கண்ணில்லை என்பதை
பொய்ப்பித்தது ...

தோற்றம்தான் காதலுக்கு முதற்படி
என்பதை உன்
மாற்றம் உறுதிப்படுத்தியது...

எச்சூழலிலும் மாறாத
மனோநிலை
சந்தித்ததும் மாற்றம் காணும் என
சிந்திக்கவேயில்லையே..

ஏமாற்றங்கள் ஒன்றும் புதிதல்லவே..
இதையும் கடந்து செல்வேன்..
இறுமாப்புடன் நீ இரு..
என் இறுதி ஊர்வலம்
இனித் தாமதமாகாது.


பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (19-Mar-18, 7:47 pm)
பார்வை : 119

மேலே