ஆசையில்லா மனது
ஆசையில்லா மனதில்
அன்பு சுரக்கும் ஊற்று..!
ஆணின் உருவம் கொண்ட
அன்னை குணத்தின் வடிவு..!
காசை தேடும் உலகில்
கருணை சுமக்கும் புனிதம்..!
கடவுளென்று சொன்னால்
கவிதை முடிந்திடுமா..!
ஏழையின் வறுமையில்
ஏப்பம்விட பலரிருக்க
சாலைவரை தேடிவந்து
சாதம் தந்த வள்ளலே..!
பாலை நிலத்திலே
பால்குளமாய் நீயிருக்க
பசியென்ற கொடுமை
பக்கத்தில வராது..!