வானத்தை நோக்கிய வாழ்க்கை

வானத்தை நோக்கிய வாழ்க்கை
மனிதனாய் பிறந்த அனைவரும்
வானம் என்ற வாழ்க்கையில்
சிறகடித்து பறக்க தான் ஆசை...
சிறகு என்ற பணத்தை தேடி
வாழ்நாள் முழுவதும் தொலைக்கிறான்...
ஆசை, பாசம், காதலை தொலைத்து
சிறகை தேடிப்பிடிக்கிறான்...
இறுதியில் வானம் நோக்கி பறந்து
வானத்தில் சிறகடிக்க இயலாமல்
வாழ்க்கையை கானல்நீராய் கடக்கிறான்...
Write
by
T.Suresh.