காதல் மௌனம்
![](https://eluthu.com/images/loading.gif)
உன் நினைவை நெஞ்சில் சுமந்து
நான் மெழுகு வர்த்தியாய் உருகிக்
கொண்டிருக்கிறேன் எந்நாளும்,
நடை பழகத் தயங்கும் பயக் குழந்தையாய்
என் காதல் பரிதவிக்கின்றது
உன்னருகே நான் வரும் போதெல்லாம்,
மௌனச் சிறையில் அடைபட்ட
கைதியாய் என் வார்த்தைகள்
ஸ்தம்பித்து நிற்கின்றன
உன் சட்டாம்பிள்ளை முகம் பார்த்து...
ஆக்கம்
அஷ்ரப் அலி