அம்மாவின் குரல்
அது என்னவோ
தெரியவில்லை
அம்மாவின் குரல்
மட்டும் எப்போதும்
புலம்பலாகவே
கேட்கிறது
பிள்ளைகளுக்கு..!
பிள்ளை
பெண்ணாக இருப்பின்
புலம்பல்களுக்குள்
ஒளிந்திருக்கும்
அக்கறையை
புரிந்துகொள்கிறாள்
இவள் அம்மாவானபிறகு..
ஆண் பிள்ளைக்கு
அம்மாவாகும்
பாக்கியம் இல்லையென்பதாலோ
அவளின் குரல் எப்போதும்
புலம்பல்களாக மட்டும்
புரிகிறதோ?
என்ன செய்வது..?
அவள் அக்கறையை
நாம் தேடும்
நேரம்
நம்மை
கருவறைக்குள்
சுமந்தவள்
கல்லறைக்குள்
உறங்கி விடுகிறாள்!