பிறந்தநாள் வாழ்த்து
பனிக்குடம் உடைத்து
தனி உடம் கொண்டு
அகவை காண வந்தாயே !
குதிரையாய் திரிந்து
பறவையாய் விரிந்து
தொடுவானம் அளந்து வென்றாயே !
நின்றால் வானம்
கொண்டால் தானம்
பேகனை மிஞ்சி நின்றாயே !
வலிகளில் நசிந்து
விழிகளில் கசிந்த
நட்பினை அணைத்துக் கொண்டாயே !
தோள்மீறி வளர்ந்தும்
தோழனாய் கொண்ட
தந்தைக்கு கோயில் கண்டாயே !
இப்பொது அல்ல
எப்போதும் வெல்ல
புன்னகை தாங்கி சிரித்தாயே !
பிணியொன்றும் இல்லாமல்
உடலூனம் கொள்ளாமல்
நீடூடி வாழிய ! வாழியவே !
பிறவியை கடந்து
அருவியாய் வென்று
வாழிய !வாழிய ! வாழியவே !