நாஞ்சில் ஓருமைகள் 5

நாஞ்சில் ஓருமைகள்
வண்டுகளும் குளவிகளும் வசந்தத்தில் கவிபாட காளைகளும் கன்னியரும் கண்டதுமே நளி ஆட
கம்பரின் வீடதனில் காதடைந்த மேளமாக
பெரியகோயில் மணி கேட்டு பொழுததுவும் தொடங்கியதே
மணியதுவும் ஒலிக்காமல் மண்ணெனவே இருந்திட்டால் மாண்டிட்டார் ஒருவர் என ஊரனைத்தும் அறிந்திட்டோம்
விடிகாலை வேளையதில் வேதமதை முழங்கிடவே பாதியுடல் ஆற்றினகம் பாலகரும் இருந்தாரே.
பாவி எவர்கண் பட்டதுவோ பாடசாலை மூடியதே.
பழையாற்றின் மணல்மேட்டில் பாங்குடனே விளையாட வெள்ளாளன் பள்ளனென வித்தியாசம் தெரியாத வினயமில்லா பெருவாழ்க்கை விதியதனால் போனதுவோ.
குருவிகளும் காக்கைகளும் கூரையதில் ஒதுங்கியதே ஆலாதன் அச்சத்தால்.
செம்போத்ததையும் போத்துதனை சிறிதளவும் கண்டிலனே
கழுகுகளும் கருடன்களும் கழனியதில் காணேனே
மீண்டிடவே யோசிக்கின்றேன்
மீள் தரவே யாசிக்கின்றேன்.
நாஞ்சில் என்றால் ஏராமே.
ஏறுமோ நாஞ்சில் வளம்!!!
சுப்ரமணியன் தாணுபிள்ளை