சொல்லப்படாத காதல்

பெண்ணே
உன் பின்னே நடந்து வரும்
கல்லூரி வரை உள்ள தூரம்
முடிவில்லா தூரமாக
இருந்துவிடக்கூடாதா !
என விரும்பினேன் ...
நீ என்னை திரும்பி பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
உன் கண்களின்
கருவிழிகளின் இருளிலே
தொலைந்து போகிறேன் நான் ...
அங்கிருந்து மீண்டு வர துடித்தேன்
ஆனால் முடியாமல் உள்ளேயே
சிறைபட்டுவிட்டேன் ...
ஒருநாள் மீண்டு எழுந்து வந்தேன்
உன் நினைவுகளை மட்டும் கொண்ட
இதயமில்லா வெறும் உடல் மட்டுமாக !
தொலைந்து போன
என் இதயத்திற்குப் பதிலாக
உன் இதயத்தை கைப்பற்ற எண்ணி
நீ போகும் இடங்களிலாம் வந்து
உன்னை எதிர்த்து
போர் தொடுத்தேன் ...
நீயோ
உன் பார்வையால்
என்னை அடித்து
தோற்கடித்துச் சென்றாய் ...
என் வீட்டு சன்னலை
பார்க்கும் போதெல்லாம்
உன் முகமே
என் கண்களுக்கு தெரிந்தன ...
உன்னைப் பார்த்துக் கொண்டாவது
இருந்த எனக்கு பார்க்கும் வாய்ப்புகளும்
பறிக்கப்பட்டன ...
உன்னை பார்த்த இடங்களைப்
பார்க்கும் போதெல்லாம்
உன் ஞாபகங்களே வந்தன ...
நானோ கல்லூரியின்
எல்லா இடங்களிலும் உன்னைப் பார்த்ததால்
எங்கு பார்த்தாலும்
உன் ஞாபகங்களே நிறைந்திருந்தன ...
உன்னைப் பார்க்காமல் தவிக்கும்
ஒவ்வொரு நாளும்
என் கண்களின் கண்ணீர் வெள்ளத்தில்
நானே மூழ்கிப் போகிறேன் ...
தூக்கம் மறந்து வீட்டை மறந்து
பைத்தியம் போல்
நீ என்னை திரும்பிப் பார்த்த
அந்த ஒருசில பொழுதுகளை நினைத்து
சிரித்துக் கொண்டிருந்தேன் ...
உன்னிடம் பேச வேண்டுமென
உன் அருகில் வருவேன்
ஆனால் நீயோ !
ஏதோ கள்வனைக் கண்டது போல
பயந்து என்னிடமிருந்து ஓடிச் சென்றாய் ...
என்னால் நீ பயப்படுகிறாயோ ?
என வருந்தி
உன்னைப் பின் தொடர்வதையே நிறுத்தினேன் ...
உன்னைப் பார்க்காமல்
இருக்க முடியாததால்
நீ போகும் இடங்களின் வழிகளிலே
மறைந்திருந்து உன்னைப் பார்த்தேன் ...
அதையும் நீ ஒருநாள் பார்த்துவிட
செய்வதறியாமல் என் இதயமோ
திகைத்து நின்றன ...
உன் பின்னே நடந்த நடைகளின்
இன்பம் அறிந்த நானோ
அதை விட முடியாமல்
மீண்டும் தொடங்கினேன் ...
தேர்வுகளின் விடுமுறை நாட்களோ
உன்னை என்னிடமிருந்து
தள்ளி வைத்தன ...
என் காதல் புரியவில்லையா ?
இல்லை ,
நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூட
இன்னும் உனக்கு தெரியவில்லையா ?
இல்லை ,
நீ எதார்த்தமாக
என்னை திரும்பிப் பார்த்ததைக் கூட
காதல் என எண்ணினோன் நானோ ?
இல்லை ,
நீ என்னை திரும்பிப் பார்த்து
சிரிப்பதெல்லாம்
வெறும் பைத்தியக்காரன் எனவோ ?
ஒன்றும் புரியாமல் என் மனமோ
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
தள்ளாடின ...
உன் காதலனாய் ,
நீ கூறும் சொல்லைக் கேட்டு
உன் பிள்ளை போல் நடக்க வேண்டுமென
பல கனவுகள் கண்டேன் !
என் காதல் என்றும்
கனவில் மட்டும்தானா ?
பெண்ணே
உன்னிடம் சொல்லப்படாத
என் காதலெல்லாம்
எழுத்துகளாக மாறி
கவிதைகளாக தொடுக்கப்படுகின்றன
இந்த இணையதளத்தில் ...