சென்ரியு கவிஞர் இரா இரவி

சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

அடி கொள்ளை
தா பங்கு
அரசியல் கொள்கை !

அசந்தால்
கடவுளை விழுங்கிடும்
மகாதேவன்கள் !

மன்னர்களை மிஞ்சினார்கள்
துணை வேந்தர்கள்
சொத்து சேர்ப்பதில் !

துச்சம்தான் சிலருக்கு
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
மேலாண்மை வாரியம் ?

ஒன்று செய் நன்று செய்
இன்றே செய்
காலம் கடத்தாதே !

காற்றுள்ளபோது துற்று
பதவியிலிருக்கும்போதே அடித்திடு
அரசியல் வேதம் !

ஏழைகளின் பழம்
பணக்காரர்களின் பழமானது
கொய்யா !

இழவைத் தடுக்க வேண்டினால்
திருமணம் செய்து வைக்கின்றனர்
அரசியல் கூத்து !

உருவம் ஒன்று
சுவை வேறு
பூசணி தர்பூசணி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (28-Mar-18, 10:03 pm)
பார்வை : 169

மேலே